Thursday 10 December 2020

இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும். - பில்கேட்ஸ்

 இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும். - பில்கேட்ஸ்

தொழில்நுட்ப ஜாம்பவானும், மைக்ரோசாப்ட் முன்னாள் தலைவருமான பில்கேட்ஸ் டிஜிட்டல் நிதி சார்ந்த சேவைகளில் இந்தியா உலகின் முன்னோடியாகத் திகழ்வதாகக் கூறி, இந்தியாவின் கொள்கைகளைப் பாராட்டினார்.
உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் தரவுத்தளம் மற்றும் எந்தவொரு வங்கி அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கும் இடையே ரூபாயை அனுப்பும் அமைப்பு உள்ளிட்ட பணப் பரிமாற்றம் மற்றும் நம்பகமான அடையாளங்களுக்கான லட்சிய தளங்களை உருவாக்கியுள்ளது.
அந்தக் கொள்கைகள் நாட்டின் ஏழைகளுக்கு, குறிப்பாக தொற்றுநோய்களின் போது பண விநியோகத்தை நிலையாக வைத்துள்ளன என பில்கேட்ஸ் கூறினார்.
கடந்த செவ்வாயன்று சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் பில்கேட்ஸ் கூறுகையில், "சீனாவைத் தவிர, மக்கள் இப்போது ஒரு நாட்டை பின்பற்ற வேண்டும் என நினைத்தால், அவர்கள் இந்தியாவைப் பார்க்க வேண்டும் என்று நான் கூறுவேன்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தைச் சுற்றியுள்ள புதுமை தனித்துவமானது.
ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும், நாட்டில் வலுவாக ஊடுருவியுள்ள கறுப்பு பணத்தை ஒழிக்கும் ஒரு நடவடிக்கையாக, 2016’ஆம் ஆண்டில் மோடி அரசு பணமதிப்பிழப்பை செயல்படுத்திய பின்னர், இந்திய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் புதிய வேகம் எடுத்தன.
யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனும் யுபிஐ, ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் வயர்லெஸ் தரவு ஆகியவை மூலம் குறைந்த காலகட்டத்தில் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தியுள்ளது.
நிறுவனங்கள் அதன் யுபிஐ இயங்குதளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்தியா கட்டளையிட்டுள்ளது. எனவே பேஸ்புக், அமேசான், வால்மார்ட், பேடிஎம் மற்றும் எந்தவொரு புதிய ஸ்டார்ட் அப் உள்ளிட்ட அனைத்து சேவைகளிலும், கட்டணமில்லாமல் உடனடியாக பணம் செலுத்த முடியும்.
“இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று பில்கேட்ஸ் சிங்கப்பூரில் நடந்த வீடியோ கான்பெரன்ஸ் மாநாட்டின் போது கூறினார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment