Monday 14 December 2020

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு.

 ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு.

அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப் பாதையில் பயன்படுத்திப் பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனைக் கொண்டு போய் சேர்க்கும் என்பது வெளிப்படையானது...
போட்டியில் தோற்றாலும், ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்...!
மனிதனாகப் பிறந்தால் ஏதாவதொன்றைச் சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளத்தில் இருக்க வேண்டும். “சாதிக்கப் பிறந்தவன் தான் மனிதன்” மனிதனால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று கூடச் சொல்லலாம்...
பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் எனக் கருதி உழைத்தனர். இறுதியில் வெற்றி பெற்றனர்...
’முடியாது என்பதை முடியும்’’ என்று சிலர் நிகழ்த்திக் காட்டிடக் காரணம் அந்தச் செயல் உறுதியாக நிகழும் என்பதை அவர்கள் மனதளவில் முழுமையாக நம்பி, அதை நோக்கித் தங்களின் முயற்சியை இடைவிடாமல் மேற்கொண்டதால் தான்...
ஆனால்!, ஒரு சிலர் வெற்றியாளர்கள் சென்ற ஆழமான நினைவுகளுக்கு, கற்பனைகளுக்கு, முயற்சிகளுக்கு செல்லத் தயாராக இல்லாததே அதை முடியாது என்று சொல்லக் காரணமாகிறது...
‘ஸ்னோ ஒயிட்’’ என்ற படத்தில் மையக் கருத்தினை வால்ட்டிஸ்னி வெளியிட்ட போது அது முட்டாள்தனமானது, நிச்சயம் வெற்றி பெறாது என்று பல்வேறு நிபுணர்களும் தங்களின் கருத்துக்களைக் கூறினார்கள்..
ஆனால்!, அந்தக் கருத்துக்களை புறம் தள்ளி விட்டு அதைப் படமாக்கினார் வால்ட் டிஸ்னி. அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது...
டிஸ்னி லேண்ட் திட்டத்தை வால்ட் டிஸ்னி வெளியிட்ட போது இது கற்பனைத் திட்டம் என்றும், இது படுதோல்வி அடையும் என்றும் பல பேர் நிந்தனை செய்தார்கள்...(நிந்தனை- கிண்டல்/கேலி)
ஆனால்!, அதை உருவாக்கிய போது உலகமே வியக்கும் அற்புதமாக அது உருவானது...
ஆம் நண்பர்களே...!
“முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை”
என்பார்கள்...!
உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா...? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள்...!!
தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கிக் கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது.

No comments:

Post a Comment