Thursday 24 December 2020

சிவாய நம

 சிவாய நம

அம்மையே அப்பா
ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே..
(திருவாசகம்)
என் தாயே! தந்தையே!
நிகரில்லாத மாணிக்கமே!
அன்பெனும் கடலில் உதித்த
அருமையான
அமுதமே!
என் உயிருக்கு உறுதி தரும் நல்ல செயல்களைச் செய்யாது தீமையான செயல்களையே செய்து என் வாழ்நாளை வீணே கழிக்கும் இந்தக் கீழானவளுக்கு மிக மேன்மையான சிவபதம் அருளிய அருட்செல்வமே!
சிவபெருமானே!
இந்தப் பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன்.
நீங்க என்னை விட்டு எங்கே சென்றுவிடப் பார்க்கிறீர்கள்?
சிவாய நம

No comments:

Post a Comment