Saturday 19 December 2020

கடந்த 295 நாட்களுக்குப் பிறகு மனிதத்தேனீ சிறப்புரை ஆற்றிய முதல் பொது நிகழ்ச்சி.

 கடந்த 295 நாட்களுக்குப் பிறகு மனிதத்தேனீ சிறப்புரை ஆற்றிய முதல் பொது நிகழ்ச்சி.

மதுரை செஷயர் இல்லத்தில்
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.
மதுரை ஆஸ்டின்பட்டியில் உள்ள செஷயர் இல்லத்தில் இன்று மாலை உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அதன் சேர்மன் டாக்டர் ஜி. வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது, பொருளாளர் பொறியாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்பு ஆற்றி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசினார், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் நலமும் உற்சாகமும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார், சிறப்பு விருந்தினர் உமாராணி கிளினிக் டாக்டர் சிவகுருநாதன், செயலாளர் டாக்டர் ஏ டி தியாகராஜன், காக்கும் கரங்கள் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மூகாம்பிகை, பாரதி டிரஸ்ட் அறங்காவலர் டாக்டர் ஆர். மாரியப்பன் வாழ்த்துரை வழங்கினர், இசைக் கல்லூரி மாற்றுத் திறன் மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன,
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹரி மணிகண்டன், சிவராஜன், கோட்டை உள்ளிட்டோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.















No comments:

Post a Comment