Monday 28 December 2020

அயோத்திச் சொத்து மீட்ப்பினைத் தொடர்ந்து அடுத்த மீட்பு காசியில் தொடங்கி விட்டது.

 அயோத்திச் சொத்து மீட்ப்பினைத் தொடர்ந்து அடுத்த மீட்பு காசியில் தொடங்கி விட்டது.

காசிச் சொத்துக்களை (மிகப் பெரிய சிக்ரா நந்தவனம் பகுதி) மீட்பதில் மின்னல்வேகம் எடுத்திட நமது தலைவர் வழக்கறிஞர்
பழ. ராமசாமி தலைமையில்
ஆக்கிரம்மிப்பாளருடன் சமரசம் பேசி தாமதமின்றி பல நூறு கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டெடுப்பதில் குழுவில் செல்வாக்கு மிக்க கோட்டையூர்
மு சொ. அழகப்பன், பணி நிறைவு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி அரிமளம் எஸ். முத்துக்குமார் தேர்வாகியுள்ளனர். மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக பள்ளத்தூர் டி. தேனப்பன், தேவகோட்டை எஸ். கதிரேசன், ஆத்தங்குடி என். நாச்சியப்பன் அவர்கள் இன்று ஒருமனதாகத் தேர்வானது அறிந்து மகிழ்ச்சி.
இது புதிய நம்பிக்கையை நடவு செய்கின்றது. இனி நமது எல்லா பலமும் களத்தில் முனைப்பு காணும்.
விரைவில் மீண்டும் நம்வசமாகும் நந்தவனம்.
காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் புதிய வரலாறு தொடங்கி விட்டது.
வாழிய மீட்புப் பணிகள்.
அயோத்தியில் மீட்புப் பணியில் கடுமையாக உழைத்த அண்ணன், காளையார்மங்களம்
கே என். சுப்பிரமணியன் (K N S) அவர்களுக்கு நமது சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
வாழிய பணிகள் - மனிதத்தேனீ

No comments:

Post a Comment