Friday 25 September 2020

காஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணரவில்லை.. சீனா உள்ளே வரட்டும் என நினைக்கிறார்கள்..முன்னாள் முதவன் பரூக் அப்துல்லா..

 காஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணரவில்லை.. சீனா உள்ளே வரட்டும் என நினைக்கிறார்கள்..முன்னாள் முதவன் பரூக் அப்துல்லா..

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது.
ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு பிறகு தற்போது 2ஜி சேவை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. பிற மாநில மக்களுக்கு உள்ள முழுசுதந்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்து விடும் என்பதே இதற்கு காரணம்.
இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வன் பரூக் அப்துல்லா ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவன் கூறுகையில், "உண்மையாகச் சொல்கிறேன் காஷ்மீரில் வசிக்கும் மக்களில் ஒருவர் கூட தங்களை இந்தியர்கள் என்று அழைத்துக் கொள்ள விரும்பவில்லை. மத்திய அரசு யாரிடம் வேண்டுமானாலும் சென்று கேட்டு பார்க்கட்டும்.காஷ்மீர் மக்கள் தங்களை பாகிஸ்தானியர்கள் என்று நினைக்கவில்லை. அதையும் நான் தெளிவுபடுத்தி விடுகிறேன். அதேநேரம் இந்தியர்கள் என்றும் அவர்கள் உணரவில்லை.
இந்திய அரசை நம்ப முடியவில்லை என்ற மனநிலைக்கு காஷ்மீர் மக்கள் வந்து விட்டது தான் இதுபோன்ற விரக்தி நிலைக்கு காரணம்.
காஷ்மீரில் உள்ள பெரும்பாலான மக்களிடம் வேண்டுமானால் பேசிப்பாருங்கள். சீனப் படைகள் காஷ்மீருக்குள் வந்தால் நல்லது என்று நினைக்கும் மனநிலையில் இருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களுக்கு சீன நாட்டில் என்ன நடக்கிறது என்பதை இந்த மக்கள் அறிந்துதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் சீனா வந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் நிலையில் தான் இங்குள்ள மக்கள் இருக்கிறார்கள். இதை நான் வெளிப்படையாக தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் இதை பிறர் கேட்க விரும்ப மாட்டார்கள் என்று நான் அறிந்து உள்ளேன்.
ஒவ்வொரு தெருவிலும் இந்திய ராணுவத்தினர் ஏகே 47 துப்பாக்கியுடன் நின்று கொண்டு இருக்கிறார்கள். இங்கே சுதந்திரம் என்பது எங்கே இருக்கிறது? இவ்வாறு பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளான்.
குறிப்பு;இங்கே சுந்திரம் இருந்ததால்தான்,இவன் சீனா உள்ளே வரட்டும் என பேசிய பின்பும் இன்னும் உயிரோடு உள்ளான் என்பதை இவன் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்..
நமது எல்லையில் சீனாக்காரன் தினம் தினம் தொல்லை கொடுத்துக்கொண்டு உள்ளான்..உலக நாடுகளே இதை உன்னிப்பாக கவனித்து கொண்டுள்ளது,இந்த நேரத்தில் இவன் ஆங்கில சேனலுக்கு,காஷ்மீர் மக்கள் சீனா உள்ளே வருவதையும் சீனா இங்கு ஆட்சி செய்வதையும் விரும்புகிறார்கள் என ஒரு செய்தியை உலகிற்கு கூறுக்கின்றான் என்றால் இவனுக்கு என்ன துணிச்சல் இருக்கும்..?இவனுக்கு எல்லாம் இந்திய அரசின் செலவில் எதற்கு பாதுகாப்பும் பிற சலுகைகளும்?
இவன் இப்படி பேச எப்படி துணிவு வந்தது?இதற்கு யார் யார் பின்புலமாக உள்ளார்கள்?இவனை இதற்காகத்தானே மத்திய அரசு உள்ளே போட்டு வைத்திருந்தது.இவனை விடுதலை செய்யச் சொல்லி அதிகமாக குரல் கொடுத்தவன் எவன் எவன் என்று பாருங்கள் அவன்களின் சுயரூபம் தெரியும்.
தேசவிரோதி என நீதி மன்றத்தால் அறிவித்த,வைகோ,மற்றும் ஸ்டாலின், திருமாவளவன்,கம்யூனிஸட்,காங்கிரஸ் காரர்கள்.
இவர்கள் எல்லாம் இந்தியர்கள்தானா?இவர்களை எல்லாம் என்ன செய்வது..?

No comments:

Post a Comment