Monday 14 September 2020

சிரிப்பவர்கள் எல்லோரும் கவலை இன்றி வாழ்பவர்கள் அல்ல.

 சிரிப்பவர்கள் எல்லோரும் கவலை இன்றி வாழ்பவர்கள் அல்ல.

கவலையை மறக்கக் கற்றுக் கொண்டவர்கள்.
மனக்கவலை இல்லாத மனிதன் இந்த உலகில் உண்டா??
*கல்யாணம் ஆகாதவனுக்கு தலையில் "முடி விழுதே" என்ற கவலை..*
*கல்யாணம் ஆனவனுக்கு தலையில் "அடி விழுதே" என்ற கவலை..*
*மன வலியை நீக்க "புத்தர்" தன்னுடைய சீடருக்கு சொன்ன அறிவுரை:-*
புத்தர்: ”நீ ஒரு காட்டுக்குள்ள போயிட்டு இருக்கும் போது, ஒரு வேடன் ஒரு மிருகத்தை நோக்கி அம்பு விடும் போது, அது எதிர்பாராத விதமாக உன்னோட கையில் வந்து குத்தி விட்டது. இப்போது உனக்கு வலிக்குமா?”, என்று புத்தர் தன்னுடைய சீடனிடம் கேட்கிறார்.
”ஆமாம் வலிக்கும், கடுமையாக வலிக்கும், அம்பு குத்தினால் வலிக்காதா? மகரயாழ் ரொம்ப கடுமையாக வலிக்கும்”, என்று சீடன் சொல்கிறார்.
“வலிக்குதுல்ல? இப்ப நீ உன்னோட அம்பை எடுத்து, அதே இடத்தில் மீண்டும் குத்திக் கொள்வாயா?”, என்று புத்தர் கேட்கிறார்.
”அதை எப்படி நான் செய்வேன்? ஏற்கனவே அம்பு குத்திய இடம் மிகவும் கடுமையாக வலிக்கின்றது. நான் எதுக்கு அதே இடத்தில் குத்த போறேன்? அப்படி நிச்சயம் பண்ண மாட்டேன்”, என்று சீடன் சொல்கிறார்.
”நீ சொல்வது தவறு. நீ அம்பு குத்திய இடத்தில் மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டு தான் இருக்கிறாய். நீ மட்டும் இல்லை. நிறைய பேரும் அந்த தப்பை தான் பண்ணிட்டு இருக்காங்க ”, என்று புத்தர் சொல்கிறார்.
புத்தர் சொன்ன கதைக்கும், மன வலிக்கும் என்ன சம்பந்தம்?
இந்த விஷயம் இப்படித்தான் நடக்கனும் என்று ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு உங்களுக்குள் இருக்கும். அது நடக்கலனா மன வேதனையும், மன வலியும் ஏற்படும்.
பரீட்சையில் பெயிலாகி விட்டா மனவலி, வேலை கிடைக்கலன்னா மனவலி, வாழ்க்கை துணை உங்க பேச்சை கேட்கவில்லை என்றால் மனவலி. மனவலி உங்களுடைய வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
மனவலி வந்த பிறகு, நாம் அனைவரும் கவலைப்படுவோம், வேதனை அடைவோம், அதுக்கப்புறம் ஒரு சில மணி நேரங்கள் அல்லது ஒரு சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்போம். அதுக்கப்புறம் இதிலிருந்து மீண்டு வருவோம். ஏராளமான நேரமும், சக்தியும் வீணாகும். ஒரு சில நாட்களுக்கு பிறகு, மீண்டும் அதை பற்றி சிந்தித்து கவலையில் முழுகுவோம். இதை தான் எல்லோரும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இது சரியான தீர்வு இல்லை.
*சிரிப்பவர்கள் எல்லோரும் கவலை இன்றி வாழ்பவர்கள் அல்ல. கவலையை மறக்க கற்றுக் கொண்டவர்கள்* என்ற உண்மையை உள்வாங்கி கொண்டு வாழ்க்கை பயணத்தை இனிதே தொடர்வோம்.

No comments:

Post a Comment