Friday 11 September 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 பேரழகி கிளியோபாட்ரோ கொடிய விஷம்பாம்பை தன் முலைக்காம்பின்மேல் ஏவி கடிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்டாள், விஷமருந்திவிட்டாள். இல்லையில்லை மார்க் ஆண்டனியால் கொல்லப்ப்டடாள்...

இப்படி ஓடிய, ஓடிக்கொண்டிருக்கிற, காலா காலத்திற்கும் ஓடப்போகிற சர்ச்சைகள்தான் இந்த டுவின் டவர் விவகாரமும்.
நியூயார்க், 2001 செப்டம்பர் 11
90 நாடுகளை சேர்ந்த 2977 பேர் பலி.. 70 ஆயிரம் கோடி சொத்து நாசம். பங்கு சந்தையில் ஒரே வாரத்தில் 85 லட்சம் கோடி பணால்.. பல நிறுவனங்கள் திவால்..
ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய அடுத்தடுத்து நடந்த தாக்குதல்..எங்களுக்கு தெரியாமல் ஈ, எறும்புகூட நுழைய முடியாது என கர்ஜித்த பெண்டகனைத்தான் ஒரேயொரு பிளேனை மோதவிட்டு என்னமாய் ஸ்கொயர் ஆக்கினார்கள்.... சேனல்களில் உலகளாவிய ஹெட்லைன்.. America,.under attack
காலை. 8.46க்கு நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் முதல் டவரை விமானம் இடித்தபோது விபத்து என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால் 9.03க்கு இன்னொரு விமானம் இன்னொரு டவரை இடித்தபோதுதான் விபரீதமே புரிய ஆரம்பித்தது..
அடுத்த அரை மணிநேரத்தில் ராணுவ தலைமையக மான பெண்டகனை மூன்றாவது விமானம் மோதி சின்னாபின்ன மாக்கியது..700க்கும் மேற்பட்டோர் அங்கே காலி..
அடுத்த அரை மணிநேரத்தில் இன்னொரு விமானம் அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை நோக்கி பறந்தது.. ..ஆனால் அந்த விமானத்தில் பயணிக ளுக்கும் விமான கடத்தல்காரர்க ளுக்கும் இடையே நடந்த கைகலப்பில் விமானம் பாதி வழியி லேயே விழுந்து நொறுங்கியது..வெள்ளை மாளிகை இன்றும் உயிரோடு இருப்பது இதனால்தான்..
சில நிமிட இடைவெளிகளில் அடுத்தடுத்து நான்கு விமானங்களை கடத்தி இப்படியொரு தாக்குதல் நடத்துவார்கள் என்ற அமெரிக்க மக்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த தாக்குதலுக்கு பின்லேடன் காரணம் என்று அவனையும் போட்டுத்தள்ளிவிட்டார்கள்..
பல்வேறு நாடுகள் மீது படையெடுக்க வசதியாக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏயே இந்த தாக்குதலை நடத்தியது என்பது உள்பட பல சர்ச்சைகள்.
ஆனால் உண்மையில் யார் இந்த தாக்குதலை நிகழ்த்தியது..? ஆளுக்கு ஆள் ஆதாரங்களோடு இன்றைக்கும் விவாதித்தபடியே உள்ளனர்.
மீள்...

No comments:

Post a Comment