Saturday 12 September 2020

மகிழ்ச்சியுடன் வாழுங்கள்..

 மகிழ்ச்சியுடன் வாழுங்கள்..

வாழ்வதே அதற்காகத்தானே!
~தலாய் லாமா
தலாய் லாமா சொல்வார்.. வாழ்வதே மகிழ்ச்சியாக இருப்பதற்காகத்தான். எனவே சோகங்களுக்கும், வருத்தங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் அங்கு இடமில்லை.
கிடைத்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாமே. அனைவரும் எதற்காகப் பாடுபடுகிறோம் நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தானே அதை விட்டு விட்டு ஏமாற்றங்களை நினைத்து நாம் ஏன் வருந்த வேண்டும்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். வாழ்வில் கிடைப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்பவனே சிறந்த மனிதன். உங்களை நீங்கள் தான் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்லுங்கள். பிடித்த உணவை உண்ணுங்கள். பிடித்த உடையை அணியுங்கள்.
வாழ்க்கையில் தன்னிறைவு அடைபவனே என்றும் மகிழ்ச்சியோடு இருக்கிறான். சந்தோசம் அது தான் மனிதனுடைய பலம். அந்த உற்சாகம் தான் அவனுடையத் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. எந்த சூழ்நிலையிலும் எவனொருவன் மகிழ்ச்சியாக இருக்கிறானோ அவனே வாழ்வில் வெற்றியடைகிறான்.
பெற்றோர்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் துணையிடம் மனம் விட்டுப் பேசுங்கள். நேரம் கிடைக்கும்போது உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள். உங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களைப் படியுங்கள்.
சின்ன சின்ன சந்தோசங்கள் மனதைப் புத்துணர்ச்சியாக்குகின்றன. மகரயாழ் சிலருக்கு சூடாகக் காபி அருந்திக்கொண்டே நாளிதழ் படிப்பதில் மகிழ்ச்சி பிள்ளைகளுக்கு ஆசிரியர் வரவில்லையென்றால் மகிழ்ச்சி அலுவலகம் செல்வோருக்கு அன்றைய தினம் எந்த பிரச்சினையும் வராமல் இருந்தால் மகிழ்ச்சி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சின்னக் குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களைப் போல கவலைகளையெல்லாம விட்டொழியுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் எப்போதும். வாழ்க்கையே வாழத்தானே அதையும் மகிழ்வோடு வாழ்ந்துப் பார்ப்போமே.

No comments:

Post a Comment