Saturday 26 September 2020

உடனே உதவிய உள்ளம்.

 உடனே உதவிய உள்ளம்.

ஒருகணமும் யோசிக்காமல் ஒரு ப்ளாங்க் செக்கை எடுத்துக் கொடுத்தார் எஸ்.பி.பி.
பதின்மூன்று வயதான விஸ்வநாதன் ஆனந்த் இருந்த ஜூனியர் செஸ் சாம்பியன் டீம் ஐஐடி மும்பையில் நேஷனல் டீம் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்வு கிட்டத்தட்ட கேன்சலாகும் நிலைமையில்; காரணம், அப்போதைய மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட் செஸ் அசோசியேஷனில் (MDCA) இந்த இளம்வீரர் குழுவை மும்பைக்கு அனுப்பி, கலந்துகொள்ளச் செய்யுமளவிற்குப் பொருளாதாரம் இல்லை.
MDCA-வின் அப்போதைய பிரசிடெண்ட்டாக இருந்தவர் தெலுங்கு கவிஞர் மற்றும் எழுத்தாளரான ஆருத்ரா.
விஜயா கார்டனில் ஆருத்ரா எழுதிய பாடல் ஒன்றைப் பாடுவதற்காக வந்திருந்த எஸ்பிபி-யிடம் அவரது ஆப்த நண்பரான ஆருத்ரா ஒரு நல்ல நோக்கத்திற்காகப் பணம் தேவை என்று கேட்டபோதுதான் கேள்விகள் ஏதும் கேட்காமல் உடனே ஒரு ப்ளாங்க் செக்கை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எஸ்பிபி.
பண உதவி கிடைத்ததால் தடங்கலின்றி மும்பை சென்ற இளம்வீரர் குழுவின் ஆனந்த் விஸ்வநாதன் தனக்கு எதிராக விளையாடிய -ஒன்பது முறை நேஷனல் சாம்பியனான மானுவேல் ஆரோனை வென்று அந்த டோர்னமெண்டின் முக்கியப்பரிசையும் வென்றார்.
இதுவே அப்புறம் அவரை தேசிய அளவில் B-மற்றும் A-அணியில் தேர்வு பெற்று விளையாடி ஜெயிக்க முக்கியக் காரணமாக இருந்தது.
எஸ்பிபிக்கு இது ஒரு சிறு பொறி.ஆனால், அவரால் இந்த நாட்டில் உருவான கலங்கரை விளக்கங்கள் எத்தனை எத்தனையோ!

No comments:

Post a Comment