Saturday 26 September 2020

ஒரு மனிதரின் மரணம் எவ்வாறு அமைய வேண்டும்?

 ஒரு மனிதரின் மரணம் எவ்வாறு அமைய வேண்டும்?

மார்க் ட்வைன் இவ்வாறு கூறினாராம்..
சவப்பெட்டி செய்பவன் கூட அவரின் மரணத்திற்காக மனமார வாய்விட்டு அழ வேண்டும். அப்படியிருக்க வேண்டுமாம் ஒருவரின் மரணம்..
சவப்பெட்டி செய்தால்தான் அவரின் பிழைப்பு நடக்கும்; வருமானம் கிடைக்கும். அப்படிப்பட்டவர் கூட ‘அய்யோ.. அவர் இறந்துட்டாரே.’ என்று உண்மையாக வருந்தும்படி ஒருவரின் மரணம் இருக்க வேண்டுமாம்.
எனில் அவர் தன் வாழ்நாளில் எத்தனை பிரியங்களைச் சம்பாதித்திருப்பார். எத்தனை நல்லியல்புகள் அமைந்தவராக இருப்பார்..?!
**
எஸ்.பி.பி-யின் மரணத்தையும் நான் இவ்வாறே காண்கிறேன். ‘அந்தாளை எனக்குப் பிடிக்காதுங்க’ என்று விளையாட்டிற்கு கூட சொன்ன நபரை இதுவரை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை.
மாறாக.. பிரியங்களை வாரிக் கொட்டின, அவரின் குரலினிமையை பல்வேறு விதமாக கொண்டாடிய நண்பர்களை மட்டுமே கண்டிருக்கிறேன்.
எனில் அவர் வாழ்ந்தது பெருவாழ்வு.
இசைக்கலைஞர் என்பதைத் தாண்டி ‘நல்ல மனிதர்’ என்கிற அடையாளத்தை தன் பெருந்தன்மையாலும் நல்லியல்புகளாலும் பலமுறை மேடைகளில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அவைகளில் பொய்யோ நடிப்போ இல்லை. அவரது இயல்பே அப்படித்தான் என்பதை உளமாற உணர முடிந்தது.
உங்களின் குரல் இனி எங்களுடன் இருக்கும் என்கிற குறைந்தபட்ச ஆறுதல் இருந்தாலும் மனம் கலங்காமல் அவற்றை எப்படி இனி கேட்கப் போகிறோம். பாலு..?😢
நன்றி ஜெய் ஷா

No comments:

Post a Comment