Wednesday 16 September 2020

துணிச்சல் ஈடுபாடு. . .

 துணிச்சல் ஈடுபாடு. . .

நான் செத்துசெத்து பொழைச்சவண்டா..... அந்த எமனைப் பார்த்துச் சிரிச்சவண்டா!
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் உடலில் இதுவரை ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. காரணம் டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் ஜாக்கிசான் துணிந்து நடித்ததுதான்.
அங்கு டூப் போடாமல் துணிந்து நடித்துதான் ஆகவேண்டும். காரணம் அங்கு கதாநாயகனுக்கு டூப் போட்டால் டூப் நடிகருக்கு கதாநாயகனைவிட அதிக சம்பளம் கொடுத்தே ஆகவேண்டும்.
உதாரணத்திற்கு ஜாக்கிசானுக்கு டூப் போட்டால் அந்த நடிகர் ஜாக்கிசானால் செய்யமுடியாததை நான் செய்வதால் எனக்கு ஜாக்கிசானைவிட அதிக சம்பளம் வேண்டும் என்பார். ஆனால் நம் ஊர் சமாசாரமே வேறு. தன்னுடைய மதிப்பு தெரியாமல் தினசரி சம்பளத்திற்கு டூப்பாக நடிக்கின்றார்கள் சண்டை நடிகர்கள்.
நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆரம்பத்தில் இருந்தே சண்டை நடிகராக தினசரி 700 ரூபாய் சம்பளத்திற்கு நடித்துவந்தாராம். சண்டைக்காட்சி ஒரு தொழிற்சாலையில் நடக்கையில் அமிலத்தொட்டியை தண்ணீர்த்தொட்டி என்று நினைத்து அதில் குதித்துவிட்டாராம். விளைவு, அந்த நொடியில் இருந்தே தன் குரல் முடி நிறம் என மூன்றையும் இழந்துவிட்டாராம். இவரின் இந்த பரிதாபக்கதையை கேள்விப்பட்ட இயக்குநர் பாலாதான் நான் கடவுள் படத்தில் மொட்டை ராஜேந்திரனை நடிகரான மிளிரவைத்து புண்ணியம் தேடிக்கொண்டார்.
ஜாக்கி சான் நடிக்கும் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது. அப்போது காட்டாற்று வெள்ளத்தில் ஜாக்கிசான் மற்றும் நடிகை மியா இருவரும் வாட்டர் ஸ்கூட்டரில் பயணித்தபோது எதிர்பாராத விதமாக வாட்டர் ஸ்கூட்டர் பாறையில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விட்டதால் ஜாக்கிசானும் மியாவும் வெள்ளத்தில் மூழ்கினர்.
மியா சிறிது நேரத்தில் மேலே வந்துவிட்டார். ஆனால் சுமார் 45 விநாடிகள் கழித்தே நீருக்கடியில் சிக்கிக்கொண்ட ஜாக்கிசான் பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியேவந்தார்.
விபத்தினை அடுத்து படப்பிடிப்பினை தள்ளி வைக்க தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்ட போதிலும், சிறிதுநேர ஓய்விற்குபின் மீண்டும் அதே காட்சியில் நடித்து அசத்தினார் ஜாக்கிசான். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாக இருக்கும் ஜாக்கிசானின் வேன்கார்டு திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாம்.
நன்றி பெரியாண்டவர்

No comments:

Post a Comment