Saturday 26 September 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 தமிழக வரலாற்றில் இதுவரை நான் அறிந்திடாத, கண்டிடாத ஒரு வரலாற்று சம்பவம் அமரர் *S.P.பாலசுப்பிரமணியம்* அவர்கள் மரணத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வுகள். இன்று தமிழகத்தில் நெருக்கமான உறவினர்கள் இறப்பில் கூட மக்கள் கலந்து கொள்வதற்கு பயந்து தவிர்த்து வரும் நிலையில், உயிரிலும் மேலான ரத்தத்தின் ரத்தமான சொந்த கட்சிக்காரன் மரணத்திற்கு செல்ல எல்லோரும் அஞ்சிச் சாகும் போது, *பின்னணி பாடகர் S.P.B* அவர்கள் உறவல்லாத, அவரால் பதவியோ, பணமோ சம்பாதிக்காத மனிதர்கள் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் உயிர் கொல்லி "கொரோனா"வுக்கு அஞ்சாமல் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்

🙏🙏.
🎤 தொடர்ந்து அவரது உடல் வீட்டிலிருந்து தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு இரவு கொண்டு செல்லப்பட்ட போதும் சாலை முழுவதும் ஆண்களும், பெண்களும் பல கிலோமீட்டர் தொலைவிற்கு நின்று அஞ்சலி செலுத்தினர். எந்த ரசிகர் மன்றமோ, அமைப்போ, அரசியல் அதிகார பின்பலம் இல்லாமல், தன் அன்பான வாழ்க்கை முறையாலும், *ஆண்டவன் அருட்கொடையான குரலாலும் கோடான கோடி மக்களை உணர்வாலும், மனதாலும் வென்ற பின்னணி பாடகர் S.P.B அவர்கள் மிகவும் புண்ணியம் செய்த ஒரு மனிதன்.*
🎹 அவரது இறுதி சடங்கு நடைபெறும் பண்ணை வீட்டின் கதவுகள் மக்கள் நுழையாத வண்ணம் 🔒பூட்டப்பட்ட போதும் அந்த நடு இரவிலும் ஆண்களும், பெண்களும் அங்கே கூடி நின்று கண்ணீர் சிந்தியதும் 😭 தமிழ் மக்களின் நன்றி 🙏 உணர்வை, பண்பாட்டை, நாகரிகத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.
*அய்யா அப்துல்கலாம் அவர்கள் மறைவுக்கு பின் மீண்டும் ஒரு நல்ல மனிதனுக்கு மரியாதை செய்து தமிழகம் தன் பெருமையை உணர்த்தி இருக்கிறது.*
🎼 வள்ளுவர், ஔவையார், வள்ளலார், கண்ணகி, பாரதி, வ.உ.சி, குமரன், வாஞ்சிநாதன் வழி வந்த *"தமிழ் ஆட்களில்"* நானும் ஒருவன் என்று பெருமை கொள்கிறேன். *தமிழ் சமுதாயம் தெளிந்து தெளிவாகத்தான் இருக்கின்றது என்பதற்க்கு S.P.B அவர்கள் மரண நிகழ்வே சாட்சி.*
*வாழ்க தமிழ் பண்பாடு...*
*வாழ்க S.P.B...*
*🙏P.சுந்தரவடிவேல் B.Com.,B.L🙏*
*வழக்கறிஞர், மதுரை.*

No comments:

Post a Comment