Monday 28 September 2020

உங்கள் சிந்தனைக்கு

 *உங்கள் சிந்தனைக்கு...*

🤔 எண்ணமும் மனமும்.
மனிதக்குலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் மிகமுக்கியமானது : நம் எண்ணத்தை மாற்றினால் நம்வாழ்க்கையை மாற்றலாம் என்பதுதான்.
மனிதமனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச்சாதிக்க முடியும் என்பதுதான்
மனிதக்குலவரலாறு.
வேளாண்மை முதல் வாட்ஸ்அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.
நம் உள்ளே உள்ள எண்ணமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள்.
“என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது?" என்று கேட்கலாம்.
உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களை ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?
உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்பவாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள் எண்ணங்கள் தான்.
ஆம்..
நண்பர்களே...
நாம் எண்ணாத எந்த செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. உங்கள் வாழ்க்கையையே நீங்கள் பாருங்கள்.
உங்களின் ஒவ்வொரு பெருமை படக்கூடிய,
வளர்ச்சிக்கும், வாழ்க்கைக்கும், உங்களது எண்ணமும், மனமும் தான் காரணமாய் உள்ளது
என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப்பாடல் வரியில் சொல்லிவிட்டார் :
“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.!"

No comments:

Post a Comment