Monday 12 October 2020

கோவில் நிலத்திற்கு பட்டா கேட்கும் வைகோ..

 கோவில் நிலத்திற்கு பட்டா கேட்கும் வைகோ..

பாளையங்கோட்டை இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிக்கும் திம்மராஜபுரம் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் சொத்துகளுக்கு
பட்டா உரிமை வழங்ககோரி தமிழக முதல்வர்க்கு கடிதம் எழுதியுள்ளார் வைகோ.
1) தென்காசி மாவட்டம்
குருவிகுளம் அருகே உள்ள கலிங்கப்பட்டி ஊராட்சி என்ற வைகோவின் சொந்த ஊரில் உள்ள கீழ மரத்தோணி அருள்மிகு தோனிஸ்வரர் திருக்கோவில் மற்றும் மேலமரத்தோணி சுந்தரேசபெருமாள் திருக்கோவில்ஆகிய இரு கோவில்கள் சார்ந்த 40 ஏக்கர் க்கும் மேற்பட்ட நிலங்களை பல வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றனர் வைகோவின் சொந்த தம்பி ரவி.
"இப்பொழுது அந்த 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை. அந்த நிலங்களையும் இந்து அறநிலைத்துறை சர்வே செய்து கண்காணிக்க வேண்டும் அப்படி பட்டா ஏதும் வழங்கப்பட்டு இருப்பின் அதை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் மேற்கண்ட இரு கோவில்களிலும் சில திருப்பணிகள் நடைபெற்றால் அதை தடுத்தும் வருகின்றனர் அறங்காவலர் குழு. இதன் பின்னணியில் கிறிஸ்துவ மிஷனரிகளின் சூழ்ச்சி உள்ளது என்பது அப்பகுதி இந்து மக்களின் கருத்து" என கூறுகிறார்,விஷ்வ ஹிந்து பரிஷத் திருநெல்வேலி ஆறுமுககனி.
2) சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநயினார் திருக்கோவில் பாத்தியப்பட்ட நிலங்களில் வை.கோ தந்தையார் வையாபுரி பெயரில் உள்ள பள்ளி
வாடகை பாக்கி 15 லட்சத்து 84ஆயிரத்து 720
வாடகை செலுத்தாதோர் பட்டியலில் முதலிடம்.(கீழே புகைப்படம்)
ஊருக்கெல்லாம் உபதேசம் வியாக்யானம் பேசும் வைகோ அவர்கள் வாடகையும் செலுத்தவலியுறுத்த வேண்டும்.
மேற்கண்ட இரு விஷயங்களையும் பார்க்கும் போது வைகோ அவர்கள் இந்து கோவில்களுக்கு எந்த நன்மைகளும் செய்தது கிடையாது என் உறுதிபடுகிறது.
இதை வன்மையாக கண்டிக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத் திருநெல்வேலி.

No comments:

Post a Comment