Tuesday 6 October 2020

*வாழ்வில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே.*

 *வாழ்வில்

நடப்பவை எல்லாம் நன்மைக்கே.*
*கடின உழைப்பும் குறிப்பிடத்தக்க தியாகமும் இல்லாமல் மாபெரும் விஷயங்கள் எதுவும் ஒருபோதும் சாதிக்கப்பட்டதில்லை.*
*சவால் எவ்வளவு பொிதாக இருக்கிறதோ வெகுமதி அவ்வளவுப் பொிதாக இருக்கும்.*
*நீ போதுமான அளவு துடிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தால், எதுவொன்றையும் உன்னால் அடைய முடியும்.*
*மற்றவர்களுக்கு நீ நல்ல விஷயங்களைச் செய்யும் போது உனக்கு நல்ல விஷயங்கள் தானாகவே நிகழும்.*
*வெற்றி தற்செயலாக ஏற்படுவதில்லை.*
*அதற்கு முயற்சியும் தியாகமும் தேவை. சாதாரணமாக மக்கள் செய்யத் தயாராக இல்லாத விஷயங்களைச் செய்யத் தயாராக இருக்கினறவர்கள் தான் அசாதாரணமான மக்கள்.*
*பிரச்சனை இல்லாத ஒரு வாழ்க்கையே இல்லை...*
*தடைகளை எதிர்கொண்டு அவற்றை அடக்கி, அவற்றின் மீதேறி சவாரி செய்வது தான் மனிதனுக்குப் பெருமை.*
*பணம் இல்லாதவனுக்கு பணமில்லையே என்பது மட்டும் தான் பிரச்சனை.*
*பணத்தை வைத்திருப்பவனுக்கு அதை எப்படிக் காப்பாற்றுவது என்பது தான் பிரச்சனை.*
*பிரச்சனையின் தீவிரம் பிரச்சனையில் இல்லை.*
*அதை நீ “பிரச்சனையாக” எடுத்துக் கொள்வதில் தான் உள்ளது.*
*நம்பிக்கை வைத்துச் செயல்படு வாழ்க்கையில் நீ உயர்ந்த நிலையை அடைவாய்.*
*நல்லதே நினைப்போம்..!*
*நல்லதே நடக்கும்..!*

No comments:

Post a Comment