Friday 9 October 2020

அரசியல்

 #அரசியல்

இதுவரை தென்னிந்தியாவில் பெரிதாக அறியப்படாத பா.ஜ.க தலைவர் யோகி ஆதித்யநாத்.
இவர் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஐந்து முறை ஒரே தொகுதியில் இதுவரை MP ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர். இந்த இனத்தவர் தான் இன்றும் பீகாரில் சவரத்தொழில் செய்பவர்கள். இவர் கோரக்நாத் மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.
அத்துடன் ஒரு கூடுதல் செய்தி கோரக்நாத் மடத்தில் இருக்கும் பல பண்டிதர்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல....!
இதுவரை இவரைப் பற்றி யாருமே அறியாத செய்தி ஒன்றை ஸ்ரீ சூரஜித் தாஸ்குப்தா தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.
தெருவில் அலைந்து கொண்டிருந்த ஒரு ஆதரவற்ற சிறுவனை இவர் கண்டெடுத்து தன்னுடனேயே வைத்துக் கொண்டுள்ளார்.
அந்தச் சிறுவனுக்குத் தன்னைப் பற்றிய அடையாளமாக தன் பெயரைத் தவிர வேறு எதையுமே சொல்லத் தெரியவில்லை.
அது ஒரு இஸ்லாமியப் பெயர்.
ஆம்.... அவன் ஒரு இஸ்லாமியச் சிறுவன்.
யோகியை ஒரு தீவிர ஹிந்துத்வவாதியாக பட்டயமிடும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது, யோகியின் வலது கரமாக இருக்கும் இந்தச் சிறுவன் இப்போதும் ஒரு இஸ்லாமியன் என்பதே......!
இவர்மீது வெறுப்பு அரசியலை உமிழ்பவர்கள், தங்களை நடுநிலை என்று சொல்லிக்கொள்பவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது இதுவே....!
அதே நேரத்தில், "தாய் மதம் திரும்ப ஆசைப் படுபவர்களை கர் வாப்ஸி மூலம் ஹிந்து மதத்திற்கு அழைத்துவந்துள்ளார்"...!
இந்தியாவில் இருக்கும் எத்தனையோ மடங்களில் யோகிகளாகவும், பண்டித்தர்களாகவும் இருப்பவர்களில் பலர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களே.
இந்தச் செய்தியை வெளிக் கொணர இனிமேல் பிஜேபி முனையும் என்பது சந்தோஷமான செய்தி. இடதுசாரிகளால் பா.ஜ.க ஒரு உயர்ஜாதியை ஆதரிக்கும் அரசியல் கட்சி என்கிற மாயை இனிமேல் உடைத்தெறியப்படும்.
பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த எத்தனையோ ஆழ்வார்களும், நாயன்மார்களும், தாக்கூர்களும், ரவிதாசர்களும் இறைத் தொண்டு ஆற்றியதை பொதுவெளியில் கொண்டுவர மோடிஜி இப்போது செய்துள்ள இந்தச் சமுதாயத் சீர்திருத்தம் பெரிதளவில் பயன்படும்.
உண்மையான சகிப்புத்தன்மையும், அற்புதமான நாகரிகமும் கொண்ட ஹிந்துமதம் மூலம் அதன் தத்துவங்களை உலகளாவிப் பரவச் செய்ய இவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்தியது
ஒரு முதல் படிக்கல்லாக அமையலாம்.
இவரை ஹிந்துமத வெறியார் என்று குற்றம் சாட்டுபவர்கள், அவர் எத்தனை பேருக்கு ஃபத்வா கொடுத்தார் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.
யோகி ஆதித்யநாத்தின் சகோதரியிடம்
ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டது.
அவருக்கு 1991 ஆம் ஆண்டு திருமணமாகி தன் கணவனுடன் உத்ரகாண்டில் இருக்கிறார். அங்கு ஒரு சிறிய கடை வைத்து நடத்துகிறார்கள். யாராவது யாத்ரீகர்கள் வந்து கேட்டால் அவர்களுக்குத் தேவையான உணவைச் சமைத்துக் கொடுக்கிறார்கள்.
யோகியின் சகோதரி தான் அங்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், யோகி முதல்வரானதைக் கேட்டு மிகவும் ஆனந்தமடைந்ததாகவும் கூறியுள்ளார். என் சகோதரன் தன் கடமையை ஒழுங்காகச் செய்வான் என்றும் கூறினார்.
நீங்கள் உத்திரப்பிரதேசத்துக்கு வந்துவிடுவீர்களா என்று நிருபர் கேட்டதற்கு, இதுதான் எங்கள் ஊர். அதனால் இங்கேதான் இருப்பேன் என்றும் சொல்லியுள்ளார்.
சகோதரியின் கணவர், தன்னுடைய ஊருக்கு ஓரிரண்டு முறை யோகி வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதெல்லாம் என்னங்க... இப்படியெல்லாம் ஒரு அரசியல்வாதியின் குடும்பம் இருந்தால் நியாயமா....?
மீம்ஸ் போட்டு தன்னுடைய இயலாமையைப் பகிர்ந்துகொள்ளும் வேஸ்ட் லாண்ட்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
படித்ததில் பிடித்தது பகிர்கிறேன்
Yogi pokkisam

No comments:

Post a Comment