Saturday 17 October 2020

முயற்சி திருவினையாக்கும் நீட் தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல

 முயற்சி திருவினையாக்கும்.

நீட் தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல என்பதை தமிழக சுயநல அரசியல்வாதிகளுக்கு நிரூபிக்கவே படித்தேன்: அரசுப் பள்ளிகள் பிரிவில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஜீவித்குமார்..
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஜீவித்குமார். இவர், கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 548 மதிப்பெண் பெற்று முதல் மாணவராக வெற்றி பெற்றார். படிப்பில் சிறந்து விளங்கியதால் இவரை நீட் தேர்வு எழுத பள்ளி தலைமையாசிரியர் மோகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நீட்தேர்வு எழுதினார். இதில் 720-க்கு 190 மதிப்பெண் பெற்றார்.
இருப்பினும் இரண்டாம் முறையாக தற்போது இத்தேர்வை எழுதி 664 மதிப்பெண் பெற்றுள்ளார். அரசுப்பள்ளி பிரிவில் இவர் இந்திய அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாணவர் ஜீவித்குமாரை தேனி ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
மேலும் அவர் பேசுகையில், "மாணவரின் இந்த வெற்றி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரிய உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.இந்த வெற்றி மூலம் நீட் தேர்வு குறித்து அரசு பள்ளி மாணவர்களின் பயத்தைப் போக்கி உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய ஜீவித்குமார், "டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்கு இல்லை. ஆனால், நீட் தேர்வு குறித்து பயந்து தமிழக மாணவ,மாணவியர் பலரும் தற்கொலை செய்வது வருத்தமாக இருந்தது.
நமது அரசியல்வாதிகள் சொல்வதுப் போல்,நீட் தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல என்பதை நிரூபிக்கவே வெறியுடன் படித்தேன். மத்திய பாடத்திட்ட புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து படித்தேன். வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால் நீட் மட்டுமல்ல எல்லா தேர்வுகளுமே மிக எளிமையானதுதான் என்பதை நமது அரசியல்வாதிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.அதைச்சொல்லி நமது மாணவ,மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.அவர்களை பயமுறுத்தக் கூடாது.
நான் சென்ற ஆண்டு தேர்வுக்கு சரியாக தயாராகமல் இருந்ததிற்கும் நமது அரசியல்வாதிகள் காட்டிய பயமே காரணம் என உற்சாகமாகக் கூறினார்.
குறிப்பு;இந்த மாணவனை பார்த்து,இது போன்ற தன்னம்பிக்கை உள்ள மாணவர்களை தமிழகத்தில் ஊக்குவிக்கவும்,இந்த ஏழைமாணவனின் முன்னேற்றத்திற்கும்,இவ்வளவு கஷ்டமான பொருளாதார சூழலிலும்,முதல் ஆண்டு தோல்வி அடைந்தாலும் தன் மகனுக்கு தன்னம்பிக்கையைகொடுத்து விடாமுயற்ச்சிக்கு அந்த மாணவனுக்கு துணை இருந்த அவனின் பெற்றோருக்கு எந்த அரசியல்வாதியாவது உதவி செய்வதாக இதுவரை அறிவித்தான்களா?
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இதுவரை ஒரு மாணவ மாணவியும் தற்க்கொலை செய்து கொள்ளவில்லையே?என இந்த பிணம் தின்னும் கழுகுகள் வருத்தத்தில் இருக்கும்.. ஆதலால்,தோல்வியடைந்த மாணவ,மாணவிகளே தனியாக சிலதினங்கள் வெளியில் செல்லாதீர்கள்..
கொலை செய்யவும் கூடும்..அதை தற்க்கொலை என விளம்பரப்படுத்தி அரசியல் செய்து ஆதாயம் அடை காத்திருக்கக்கூடும்..உஷார்.!
நன்றி ராஜப்பா தஞ்சை


No comments:

Post a Comment