Monday 5 October 2020

சிந்தனைக் களம்

 சிந்தனைக் களம்

முயற்சி செய்யாமலேயே, நான் தோற்று விடுவேன் என்று நினைத்தே நம்மில் பலர் அவர்களது ஆயுளில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே வாழ்ந்து(?) விடுகின்றனர்.
ஒரு சிலரே
“எதுவானாலும் ஒரு கை பாப்போம், என்ன உசுரா போப்போது” என்று முயற்சி செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா ?? என்பது விஷயமல்ல. முயற்சி செய்கிறார்களே அதுதான் முக்கியம், அதுதான் நம்மைப் பொறுத்தமட்டில் நிஜமான வெற்றி.
“ஏன் நீ மற்றவனுக்காக வாழ வேண்டும் ??? உனக்காக ஒரு நாள் வாழ்ந்து பார் வாழ்க்கையின் ஆழம் புரியும்”. என்பதுதான் காலம் காலமாக நம்மால் சொல்லப்பட்டு வரும் ஒரு வாழ்வியல் தத்துவம்.
உண்மையில் நம்மில் பலபேர் மற்றவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் நமது முயற்சிக்கு முதல் எதிரியாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகின்றது. அடுத்தவனுக்காகவே வாழ்ந்து அடுத்தவனுக்காகவே மரணிப்பதுதான் வாழ்க்கையா ?? கொஞ்சம் சிந்திக்கலாமே ???
“நான் ஒரு வேளை தோற்றுப் போனால் மற்றவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்” என்கின்ற பய மனோபாவம் நம்முடன் சேர்த்து பல பேரை தொற்றிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் நம்மில் பலர் அறியாத உண்மையாகும்.
இதிலிருந்து விடுபட்டு எப்போது ஒருவன் வெளியேறி விடுகிறானோ அன்றிலிருந்து அவனது வெற்றிக்கான அடித்தளம் இடப்படுகின்றது என்றுதான் அர்த்தம். நிச்சயமாக வாழ்க்கையில் தோற்றுப் போவதென்பது ஒரு விஷயமல்ல ஆனால் முயற்சி செய்யாமலேயே தோற்றுப் போவதுதான் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் களையப்பட வேண்டியதொரு விஷயமாகும்.

No comments:

Post a Comment