Monday 19 October 2020

ஆசிரியர்குரல்அருணாசலம்

 #ஆசிரியர்குரல்அருணாசலம்

நடந்தது என்ன ? அரசியல் ஆக்காதீங்க மக்கா ....😪😪😪
அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியர்
சில்வார்பட்டி
தேனி மாவட்டம் .
நேரடி வாக்குமூலம் :
எனது பள்ளியில் படித்த மாணவர் ஜீவித் குமார் கடந்த வருடம் மருத்துவ நீட் தேர்வு எழுதி 198 மதிப்பெண் பெற்றார். ஏழைக் குடும்பம் என்பதால் ஆர்வம் இருந்தும் தனியார் பயிற்சி மையத்திற்கு செல்ல இயலாத நிலை். என்னை அப்பா என்றே அனைவரும் அழைப்பதால் , ஒரு மகனாக என்னிடம், நீங்கள் என்னை வெளியில் பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுங்கள் .நான் படிக்கிறேன் என்றார். நான் எனது பள்ளி ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்ததன் பேரில் அனைவரும் உதவி செய்ய முன் வந்தனர். தனியார் பயிற்சி மையத்தில் ரூ 1 , 10, 000 - ஒரு லட்சத்து பத்தாயிரம் கட்டணம் என அறிந்தோம் .
எங்களால் இயன்ற வரை முதல் தவணையாக ௹ 60 ,000 ரூபாய் சேர்த்து மாணவரை தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டேன். அப்போது அங்கு பொறுப்பாளரிடம் அரசுப் பள்ளி மாணவன் , ஆசிரியர்களின் உதவி பெற்று தான் இந்தத் தொகையைக் கட்டுகிறேன். சில மாதங்கள் கழித்து மீதித் தொகையை செலுத்துகிறேன் என கோரிக்கை வைத்தேன். அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
அடுத்த முறை ரூ50,000 மீதிப் பணத்தை சேகரித்து கட்டணம் செலுத்த எடுத்துச் சென்ற போது , தனியார் பயிற்சி மையத்தின் அந்தப் பொறுப்பாளர் இதுவரை வைத்த எல்லாத் தேர்வுகளிலும் இந்த மாணவர் முதல் 5 இடத்திலேயே வந்து கொண்டு உள்ளதால் மீதிப் பணத்தைக் கட்ட வேண்டாம் எனவும் , எங்களுக்கும் மாணவன் தான் , ஆகவே நீங்கள் 50,000 கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார். இது தான் நடந்தது.
மாணவர் உழைத்து பள்ளி ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர் அரவணைப்புடன் தற்போது இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார்.
மக்கள் சிந்திக்க வேண்டும் .
Uma Maheswari Gopal
நன்றி பி அருணாச்சலம்


No comments:

Post a Comment