Wednesday 21 October 2020

பெரிதினும் பெரிது கேள்.

 பெரிதினும் பெரிது கேள்.

முகேஷ் அம்பானி பணக்காரர்கள் வரிசையில் உலகில் முதல் ஐந்து இடத்திலா? கீழே கொடுக்கப்பட்டுள்ள, இந்த வரிசையையா குறிப்பிடுகிறீர்கள்? அண்ணன் மார்க் கோபித்துக் கொள்ள போகிறார்.
சரி உங்க ஆசைக்கு இன்னும் கொஞ்சம் தகவல்கள்:
கடந்த 13 வருஷமாவே முகேஷ்பாய் இந்தியா சார்பில், இந்த டாப் 10 வரிசையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகிறார்.
இப்படி ஒரு கொரோனா நேரத்திலும் எப்படி? அதானே இந்தக் கேள்வியின் சாராம்சமே?
அங்கதான் நிக்கறார் முகேஷ்பாய்.
ஜியோ சிம்மில், தினமும் 1 ஜிபி / 2 ஜிபி டேட்டா இணைய சேவையில் சும்மா அடித்துத் தூள் பரத்தி இருப்பீர்களே?
எத்தனை லாக் டவுன் வந்தால் என்ன? போனை நோண்டுவது நின்றதா என்ன?
செப்டம்பர் 5 2016லேயே ஜியோ ஆரம்பித்து பட்டய கிளப்ப துவங்க, அதுவரை கேள்வி கேட்க ஆளில்லாமல் இருந்த ஏர்டெல்லும், வோடோபோனும் தலையில் துண்டு போட்டுக் கொள்ள ஆரம்பித்தது.
31 Dec 2019 வரை இந்தியாவின் நம்பர் ஒன் தொலைபேசி சேவை நெட்வெர்க் - 38.75 கோடி சந்தாதாரர்கள், உலகில் மூன்றாவது பெரிய நெட்வெர்க்.
விடுமுறைக்கு வந்த செல்வ மகள் இஷா அம்பானி "என்னப்பா, இணைய சேவை இவ்வளவு மெதுவா இருக்கே? " என்று சலித்துக் கொண்டாராம். உடனே அப்பாவுக்கு மூளையில் பல்பு எரிய, ஜியோ பிறந்தது.
"எக்ஸாமுக்குப் படிக்காம, எப்பப் பாரு இண்டர்நெட்?" என்று அந்த மகள் முதுகில், நாலு சாத்து சாத்தி இருக்கலாமே! என்று ஏர்டெல் முதலாளி பொறுமியதாக ஒரு வதந்தி. தன் மகள் எவ்ளோ பெரிய அறிவாளியென்று மகள்களைப் பெற்ற அப்பாவுக்குத்தானே தெரியும்.
ஜியோ போதாதுன்னு ரிலையன்ஸ் Retail மார்க்கெட் வேற - கூகுள், பேஸ்புக் எல்லாம் முதலீடு செய்யத் தயாரா இருக்காங்களாம். அமேசானுக்கு இந்தியாவில் பெரிய ஆப்பு தயாராகி வருகிறது.
இது போக, மார்வாடிகளுக்கே உரிய நிதி மேலாண்மை வேற. எனவே எப்பவுமே "பொன்மகள் வந்தாள்! பொருள் கோடி தந்தாள் தான்!"
மாங்கன்று, தென்னங்கன்று எல்லாம் தோட்டத்தில் வைக்கும் பொழுது சிறிதாகத்தான் இருக்கும். முதலில் மிகவும் கவனமாகப் பராமரித்து வந்தால், சில வருடங்கள் கழித்து ஒவ்வொரு வருடமும் நல்ல மகசூல்தான்.
அதுவே சப்பாத்திக் கள்ளிக்கு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக அப்படியே காலமெல்லாம் இருக்கும். ஆனால் அறுவடை?
அதேபோலத்தான் நமது சேமிப்புகளை மா, தென்னை போல வருடாவருடம் பயன் தரும் இடங்களில் முதலீடு செய்து விட்டால், அப்புறம் வாசக் கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரம்தான்.
முகேஷ் பாயும் அதே போலத்தான் மா, தென்னைகளைத்தான் நடுவார். இந்த கேள்வி பதிலை முடிந்தால் புக் மார்க் செய்து வையுங்கள், அடுத்த வருடத்துக்கும் இதுதான் பதில். தர வரிசை வேண்டுமானால் மாறலாம்.
இந்தக் கேள்வியின் நோக்கம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எனது பதிலின் நோக்கம் முகேஷ் புகழ் பாடுவதல்ல. ஒரு செய்தியில் என்ன கற்கலாம் என்பதே!
பின் குறிப்பு: அடுத்த முறை அமேசான் முதலாளி Jeff Bezos ஏன் பல வருடங்களாக முதலிடத்தில் இருக்கிறார்? என்று கேளுங்கள். பெரிதினும் பெரிது கேள் தமிழா!
நன்றி லெட்சுமணன் செட்டியார்

No comments:

Post a Comment