Monday 19 October 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 *வாழும் நாட்களில்*

*மகிழ்ச்சியையும்*
*மன அமைதியையும்*
*தேடுங்கள்!*
*மனிதனுடைய*
*வாழ்நாள் தேவைகள்*
*ஒருபோதும் தீர்ந்து*
*விடப்போவதில்லை!*
*நாளைய வாழ்க்கையை*
*வாழ்ந்து விட*
*இன்றைய நாளை*
*ஏன் வாழாமல்*
*வீணாக்குகிறீர்கள்?*
*அழகாக இல்லை என* *வருத்தப்படாதீர்கள்!*
*உங்கள் தகுதி*
*உயரும் போது*
*நீங்கள் அழகாகத்*
*தெரிவீர்கள்!*
*சில நேரம் கோபம்*
*தவறான வாளை எடுத்து* *சரியானவர்களை*
*வீழ்த்தி விடுகிறது!*
*கடவுள் வரம் எல்லாம்*
*தர மாட்டார்;*
*சந்தர்ப்பம் தான் தருவார்!*
*அதை வரம் ஆக்குவதும்*
*சாபம் ஆக்குவதும்*
*உங்க கையில் தான் உள்ளது!*
*வெற்றிக்கான நிச்சய வழி*
*எதுவெனில்*
*தோல்வி அடைந்த பிறகும்...*
*இன்னும் ஒரு தடவை*
*முழு அளவில்*
*முயற்சி செய்வது!*
*நீந்த முடியாத*
*மீன்களைக் கடல்...*
*கரை ஒதுக்கி விடும்!*
*அதுபோல் உழைக்காத*
*மனிதனை*
*சமூகம் ஒதுக்கி விடும்!*
*எழுந்திருப்பதை*
*பத்து நிமிடம் தள்ளிப்*
*போடுவதிலிருந்து...*
*அன்றைய தோல்விகள்*
*ஆரம்பிக்கும்!*
*உங்களின் அத்தனை*
*பொய்களையும்*
*ஏற்றுக் கொள்பவர்கள்*
*ஏமாளி அல்ல!*
*அவர்கள் உங்களை*
*இழக்க விரும்பாமல் கூட* *சகித்துக் கொண்டு இருக்கலாம்!*
*அடிபடும் போது தான்*
*நிதானம் வருகிறது!*
*வாகனத்திலும் சரி,*
*வாழ்க்கையிலும் சரி!*
*உங்களிடம் என்ன*
*இருக்கிறதோ...*
*அதற்காக நன்றியுடன்*
*இருங்கள்!*
*ஏனெனில் பலர் அது கூட*
*இல்லாமல் வாழ்க்கையைக்* *கழிக்கிறார்கள்!*

No comments:

Post a Comment