Saturday 17 October 2020

அடுத்தவர்களின் குறைகளை.

 அடுத்தவர்களின் குறைகளை.

மனிதர்களுக்கு இடையில் ஒருவரையொருவர் வெறுப்பதற்கும், இதமான உறவு இல்லாமல் போவதற்கும் சரியான, தெளிவற்ற, தவறான புரிதல்கள் தான் காரணம்...
மற்றவர்களைத் தவறாக எண்ணுவதற்குக் காரணமாக இருப்பது தேவையற்ற அய்யப்பாடுகளும் அவதூறு பரப்புதலும் தான் என்றால் அது மிகையில்லை...
கெட்ட எண்ணத்தில் ஆதாரம் இல்லாமல் நாம் பேசும் பொழுது நிறைய பொய்களை சேர்த்துப் பேச வேண்டிய நிலை உருவாகி விடுகின்றது. அவர்களைப் பற்றி தேவையில்லாமல் துருவித் துருவி ஆராய வேண்டிய நிலையையும் உருவாக்கி விடுகின்றோம்...
மனிதர்களில் எவரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது...!
எனவே!, பிறரின் குறைகளையும், அவர்களின் அந்தரங்க செயல்களையும் எக்காரணம் கொண்டும் துருவித் துருவி ஆராயமல் இருப்பது மிக நல்லது...
சிலர் தங்கள் பொன்னான நேரத்தை, தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் அடுத்தவர்களின் குறைகளைக் கண்டுபிடிக்கவே செலவிட்டுக் கொண்டிருப்பார்கள்...
அவர்களின் கண்களுக்கு மற்றவர்களிடம் இருக்கும் நிறைகள் தெரியாது. குறைகள் மட்டுமே தெரியும். அடுத்தவர்களின் குறைகளைக் கண்டுபிடிக்கவும், அதுபற்றிப் பேசவுமே தங்கள் மூளையை பயன்படுத்திக் கொண்டிருப்பதால், அவர்களது மூளை அதற்கு அப்பால் சிந்திக்கும் திறனை இழந்து விடும்...
ஆம் நண்பர்களே...!
மற்றவர்களின் குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பவன், தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறான்...!
மற்றவர்களின் குறைகளை எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு, தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்குப் பெயர் தான் ''தன்நலம்''.

No comments:

Post a Comment