Tuesday 7 November 2023

வழியும் வலியும் . .

 வழியும் வலியும் . .

*பொறுமை எனும்
இமை மூடிக் காத்துக் கொண்டிரு.*
*வறுமை மாறும்
பொறாமை ஒழியும்.*
*செய்கின்ற முயற்சியில்,
சொல்கின்ற வார்த்தையில் உண்மையிருந்தால்.*
*பொறுமை வெல்லும்
பொய்மை மாளும்.*
*கருமையான
வானம் வெளுத்தே தீரும்.*
*பொறுமை கொண்ட உனக்கு.*
*வெற்றி நிச்சயம். *
*உயர்ந்த விஷயங்களை
என்னால் செய்ய முடியாது என்றால், சிறிய விஷயங்களை உயரிய முறையில் என்னால் செய்ய முடியும்.*
*தெளிந்தவனுக்கு
எல்லாம் வழியாகத் தெரியும்.*
*தெளிவில்லாதவனுக்கோ
எல்லாம் வலியாகத் தெரியும்.*
*எதிர்ப்புகள்
இருக்கிறதே என்பதற்காக*
*உன் கருத்துக்களை முடக்காதே*
*தற்போது
அங்கீகாரம் பெற்ற கருத்துக்கள் எல்லாம்*
*ஒரு காலத்தில் எதிர்க்கப்பட்டவைகளே.*
*எண்ணம்
உறுதியாக இருந்தால்
எண்ணியப்படி உயரலாம்.*
*நமது எண்ணம் தான்
நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது.*
*எல்லோரும்
நல்லவர்களாக இல்லாமல்
இருக்கலாம். ஆனால்,
எல்லோரிடமும் ஏதோ ஒரு
நல்ல விஷயம் இருக்கிறது.*
*ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.*
*உன்னால்
செய்ய முடியாததை
கடைபிடிக்க முடியாததை*
*மற்றவர்களிடம்
எதிர்பார்க்காதே.*
*எவன் ஒருவன் தன்
அறிவின் அகந்தையால்
பிறரை அவமதிக்கின்றானோ*
*அவன் அறிவுடையோன்‌
என்றாலும் மந்த புத்தியுடையவன்.*
*வட்டம் போட்டு வாழ்வதில்
தவறு இல்லை.*
*ஆனால்*
*அந்த வட்டம் மட்டுமே வாழ்க்கை
என்று நினைப்பது தான் தவறு.*
*கற்றுக் கொண்டே
இருப்பவர்கள் தோற்றுப் போவதில்லை.*
*கற்பித்துக் கொண்டே
இருப்பவர்கள் சோர்ந்து போவதில்லை.*
*விதையில்
நல்லது எதுவென யார்க்கும் தெரியாது.*
*விளையும் போது
நல்ல உரங்கள் தான்,
நல்ல விளைச்சலைத் தருகிறது.*
*வளரும் போது,
நல்ல பாடத்தைக் கற்றால்.*
*வெற்றி நிச்சயம். *
*காலம் எந்தக் காரியத்தையும்
மாற்றுவது இல்லை*
*அது நம் மனதைப்
பக்குவப்படுத்துகிறது*
*அவ்வளவு தான்*
*'நிதானம்' என்னும்
அற்புதமான
ஆயுதத்தைப் பயன்படுத்துபவர்கள்*
*எதையும் சாதிப்பார்கள்.*

No comments:

Post a Comment