Thursday 2 November 2023

மாநகர் மதுரையில் நடைபெற்ற பங்காளிக்குப் பாராட்டு. மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய தலைவராக வரலாற்று வெற்றியினைப் பெற்ற பாகனேரி ஆர்எம். வயிரவன் தலைமையிலான ஐவர் குழுவின் நால்வர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கும் யூனியன் கிளப் முதல் தளத்தில் உள்ள அரங்கில் இன்று இரவு வயிரவன் கோவில் நடப்புத் தலைவர் டி எஸ். திட்டாணி அவர்கள் தனது சார்பாக சிறப்பான பாராட்டு விழா பி கே சைக்கிள் மார்ட் உரிமையாளர் ஏஆர் கேஎன். அருணாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆர். கதிரேசன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். ஆர் . முத்து கணேசன் வாழ்த்துரை வழங்கினார். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் மழை போன்ற வாழ்க்கை என்ற தலைப்பில் 32 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றுகையில் புதிய நிர்வாகம் முதல் பந்தில் ஆறு ரன் எடுத்து சாதனைப் படைத்து தங்கள் பணியை முதல் மூன்று நாட்களிலே மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளனர். மதுரை நகரத்தார் சங்கத்தின் வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு மாதம் ரூ 500 வழங்க உள்ள திட்டம் , காவல் நிலையம் மீட்டெடுக்கும் பணி, திருப்பரங்குன்றம் திருமண மண்டபம் மேம்படுத்த, சங்கம் பதிவு மீண்டும் புதுப்பிக்க, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் பட்டியல் அனைவரும் அறிந்திட மின்னல் வேகப் பணி தொடங்கியது , நிர்வாகிகள் ஓரணியில் தங்களின் ஒற்றுமை உணர்வுடன் கைகோர்த்துள்ளது என ஆரம்பமே அற்புதமாக உள்ளது என்றார். பொதுப் பணத்தை சிக்கனமாக, விடுதியில் தங்குவோர் முன்னுரிமை, அறைகளில் தங்கும் நம்மவர் நலன் என அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், இளைய தலைமுறையினர் அதிகம் பங்கேற்றுப் பயன்படும் நிகழ்ச்சி, திருமணத் தகவல், கல்விக்கு வழிகாட்டல், மணமுறிவு தடுக்க விழிப்புணர்வு கூட்டம், ஆடம்பரமின்றி எதிர்காலப் பணிகள் என முத்திரை பதிக்க உள்ளனர் என்றார். தனிமனித ஆதிக்கம், நிர்வாகத்தில் பிறரது தலையீடு இன்றி முழு சுதந்திரத்துடன் இந்தக் குழு செயல்பட வேண்டும் என்றார். உறுப்பினர்கள் நலனும், சமூக பண்பாட்டுச் சிறப்பும் இரண்டு கண்களாகத் திகழும் என்றார். விழா ஏற்பாடுகளை தனது பொறுப்பில் செய்து மகிழ்ந்த வயிரவன் கோவில் தலைவர் டி எஸ். திட்டாணி அனைவருக்கும் இனிப்புகள் பரிசாக வழங்கி நன்றி கூறினார். மூத்த நகரத்தார்கள் உலகம்பட்டி சிங்காரம் செட்டியார், சோழபுரம் ஏஎன். சுப்பையா செட்டியார், வயிரவன் கோவில் மேனாள் தலைவர் கே.ஆர். மீனாட்சி சுந்தரம், துணைத் தலைவர் அண்ணாமலை, நச்சாந்துபட்டி சிவனடியான், டாக்டர் எஸ். சுவாமிநாதன் டாக்டர் கே.ஆர். கண்ணப்பன், விராமதி அழகப்பன், பாகனேரி ஆர்எம். ஆனந்தன், ஒக்கூர் ராமநாதன், தேவகோட்டை எஸ்பி காசி, எஸ்பி சண்முகம், ஆச்சி வந்தாச்சு நா. பழனியப்பன், நடராஜபுரம் ஜி. உடையப்பன், தேனிபட்டி செந்தில்,கல்லல் வயிரவன், ஐயப்பன், பெல் மணி, வி. டி. கண்ணன், என் கே ஆர். முத்தையா, சகானா சத்தியமூர்த்தி, கே. எம். முருகப்பன், ஒத்தக்கடை கருப்பையா, ஆர்எம். பிரபாகரன், அலவாக்கோட்டை செல்வம், லெட்சுமணன், மகிபாலன்பட்டி ஒய் ஆர் ஒய். ராமநாதன், கல்வியாளர் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர். நிர்வாகிகள் ஏ. சொக்கலிங்கம், எஸ். சோமசுந்தரம், ஆ. வள்ளியப்பன், ஏ. லெட்சுமணன் அனைவருக்கும் கைத்தறி ஆடை அணிவித்து மகிழ்ந்தனர். சிறப்பான இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.



























































 

No comments:

Post a Comment