Wednesday 15 November 2023

குறை சொல்வது எளிது .

 குறை சொல்வது எளிது .

*யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ,
யார் அறிவாளியோ
அவர்கள் தான் முதலில் விட்டுகொடுப்பார்கள், அனுசரித்து போவார்கள், பொறுத்து போவார்கள்.*
*விட்டுக்கொடுக்கும் குணமும் அனுசரித்து போகும் மனசும் இருந்தால் வாழ்க்கை எப்போதும் சுகந்தான்.*
*அன்பு மட்டும் தான் உலகில் நிரந்தரமானது.
அதை உண்மையாக்குவதும் பொய்யாக்குவதும் நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது.*
*அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய்ப் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்.*
*உங்களுக்கு உதவ உங்கள்
மூளையைப் பயன்படுத்துங்கள்
மற்றவர்களுக்கு உதவ உங்கள் இதயத்தைப் பயன்படுத்துங்கள்.*
ஒரு பிரபல ஓவியர் இருந்தார். அவர் ஒரு அழகான ஓவியத்தை வரைந்து, அவர் இருந்த நகரத்தின் மத்தியில் மாட்டி, அதில் இருக்கும் குறைகளை யார் வேண்டுமென்றாலும் சுட்டிக்காட்டலாம் என்று எழுதி வைத்தார்.
மறுநாள் வந்து பார்த்த போது, அந்த ஒவியம் முழுக்க கிறுக்கல்கள் தான் இருந்தன.
அவர் வருத்தத்துடன் இருந்த போது, அவரை பார்க்க வந்த நண்பர், காரணம் தெரிந்துக் கொண்டு அதற்கு ஒரு வழி சொன்னார். மறுநாள் இன்னோரு ஓவியத்தை அதே இடத்தில் வைத்த ஓவியர், அதில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை திருத்தும்படி குறிப்பு எழுதி வைத்தார்.
மறு நாள் வந்துப் பார்த்த போது, அந்த ஓவியத்தில் எந்தத் திருத்தமும் செய்யப்படாமலும், ஏதும் கருத்து எழுதப்படாமலும் இருந்தது.
அவர் வாழ்வின் யதார்த்தத்தை புரிந்துக் கொண்டார்.
அதாவது
*குற்றம், குறை சொல்வது எளிது ஆனால் அதைச் சரி செய்வது கடினம். மக்கள் நம் மீது குறை சொல்லி விமர்சனம் செய்யலாம். அதை பொருட்படுத்தாமல் முன்னேறி ஜெயிப்பதே வாழ்க்கை.*

No comments:

Post a Comment