Tuesday 21 November 2023

வள்ளல் ஞானி . .

 வள்ளல் ஞானி . .

1)கொடுத்ததை
நினைப்பவன் மனிதன்.
2)கொடுத்ததை
மறந்தவன் வள்ளல்.
3)கொடுத்ததைக்
கேட்பவன் கடன்காரன்.
4)கொடுத்ததை
சூழலில் சொல்பவன் சுயநலவாதி.
5)கொடுத்ததை
ஞாபகப்படுத்துபவன் வஞ்சகன்.
6)கொடுத்ததை
வேண்டாம் என்பவன் பரந்த உள்ளமுடையவன்.
7)கொடுத்ததை
வாங்காதவன் தன்மானமுள்ளவன்.
8)கொடுத்ததை
பெருந்தன்மையாகக் கருதுபவன் வறியவன்.
9)கொடுத்ததை
மரியாதைக்காக வாங்குபவன் மதிப்பவன்.
10)கொடுத்ததை
பிறருக்கு உபயோகிப்பவன் தன்னலமற்றவன்.
11)கொடுத்ததை
தானம் செய்பவன் கருணை மனமுடையவன்.
12)கொடுத்ததை
இறைவன் அளித்தது என்பவன் ஞானி.
13)கொடுத்ததை
இடமறிந்து பயன்படுத்துபவன் அறிவாளி.
14)கொடுத்ததை
தக்க நேரத்தில் உபயோகிப்பவன் புத்திசாலி.
15)கொடுத்ததை
பாவகாரியத்தில் ஈடுபடுத்துபவன் துரோகி.
16)கொடுத்ததை
தெய்வ காரியத்தில் ஈடுபடுத்துபவன் பக்தன்.
17)கொடுத்ததை
கொடுத்தவனுக்கே கொடுப்பவன் கணக்கன்.
18)கொடுத்ததை
ஏழைகளுக்கு அளிப்பவன் மகான்.
19)கொடுத்ததை
உறவுகளுக்கு அளிப்பவன் பந்தபாசமுள்ளவன்.
20)கொடுத்ததை
உலக நலனுக்கே செலவிடுபவன் புனிதன்.

No comments:

Post a Comment