Thursday 23 November 2023

எப்படி இருந்த பழமொழி

 எப்படி இருந்த பழமொழி

இப்படி ஆயிடுச்சே. இது சரியா.
1. "கல்லைக் கண்டால்
நாயைக் காணோம்
நாயைக் கண்டால்
கல்லைக் காணோம்"
சரியான பழமொழி :
"கல்லைக் கண்டால்
நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால்
கல்லைக் காணோம்".
விளக்கம் :
இங்கு
நாயகன் என்பது
கடவுளைக் குறிக்கிறது.
கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளைப் பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாகப் பார்க்கும்போது கல்லைப் பார்க்கமாட்டீர்கள்.
இதில் நாயகன்
என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.
கடவுளை நாயாக்கிய பெருமை மாற்றியவர்களையே சேரும்.
2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு - தவறு.
சரியான பழமொழி :
ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு .
3. படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதுனவன்
ஏட்டைக் கெடுத்தான் - தவறு.
சரியான பழமொழி :
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான்
4. ஆயிரம் பேரைக் கொன்றவன்
அரை வைத்தியன். - தவறு.
சரியான பழமொழி :
ஆயிரம் வேரைக் (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் -
5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு.
சரியான பழமொழி :
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு -
( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.
அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது.
ஒரு சுவட்டைப் பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )
6. அற்பனுக்கு வாழ்வு வந்தால்
அர்த்த ராத்திரியில்
கொடை புடிப்பான் -தவறு.
சரியான பழமொழி :
அர்பணித்து வாழ்ந்து வந்தால்
அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.
நம் முன்னோர்கள்
நம் நல்வாழ்வுக்காகச் சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.
மூலத்தைத்
தெரிந்து கொள்வோம் நண்பர்களே.
கடவுள் நம்மைப் பார்க்கிறார்
எனில் அவரைத் தேடி
கோவில்
சென்று வணங்க வேண்டும்.
இதே போல தான் ஒரு அரச மரத்துக்கு அடியில உட்கார்ந்து இருந்த பெரியவர் கிட்ட வேகமா பைக்ல வந்து
சரக்குன்னு பிரேக் அடிச்சு நிப்பாட்டி ஸ்டைலா வந்து ஒருத்தர் கேட்டார்.
எல்லா இடத்திலும்
சாமி இருக்குன்னா அப்புறம் ஏன் கோயிலுக்குப் போகணும்னு.
பெரியவர் சிரிச்சுக்கிட்டே
கீழே இறங்கி பைக் டயர்லருந்து காத்தைப் புடுங்கி விட்டார்.
எல்லா இடத்திலும் காத்து இருக்குதே அப்புறம் எதுக்கு
டயர்ல காத்து ன்னு கேட்டார்.
அதே போலத்தான்
எல்லா இடத்திலும் சாமி இருக்கு
என்று சொன்னாலும் அதைத் தேடும் சிந்தனையை,
மனதை ஒருமித்து
குவித்து சக்தி இருக்கும்
இடமாகப் பாவித்து ,பிரார்த்தனை வேண்டுவதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது.
அந்த இடம் தான்
கோவில்.

No comments:

Post a Comment