Monday 20 November 2023

மாநகர் மதுரையில் நேற்று மாலை நடைபெற்ற ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம்.

 மாநகர் மதுரையில் நேற்று மாலை நடைபெற்ற ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு

மற்றும்
பொதுக்கூட்டம்.
மதுரை மகாநகர் ஆர் எஸ் எஸ் சார்பில் நடைபெற்ற பேரணி காவல்துறை அனுமதி 500 பேருக்கு மட்டுமே என்பதால் சரியாக 500 பேர் சீருடை அணிந்து அணிவகுக்க, திருநகர் 3 ஆவது நிறுத்தத்தில் தொடங்கி திருப்பரங்குன்றம் சன்னதியில் நிறைவு பெற்று அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கட்டுப்பாடு, தேசபக்தி, சுய ஒழுக்கம், நேர நிர்வாகம், அனைவரும் சமம் என்ற வார்த்தைகள் வடிவமாக இருந்தது.
98 ஆம் ஆண்டு சங்கத் தொடக்க விஜயதசமி விழா, வள்ளலாரின் 200 ஆவது பிறந்த நாள், அண்ணல் அம்பேத்கரின் 133 ஆவது பிறந்த நாள்
இதனை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டம் மகாநகர் தலைவர் மங்கள முருகன் முன்னிலையில்
நடைபெற்றது.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் தலைமையுரை ஆற்றுகையில் இது தேச பக்தர்களின் சங்கமம், கடைக்கோடி மனிதனின் நலனே இவர்கள் மூச்சு.
பாரதநாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் நினைவகற்றாதீர் என்றார் மகாகவி பாரதி.
சகிப்புத் தன்மையின் அடையாளம் இந்து மதம். எதிலும் நேர்த்தி மிகச் சரியான கட்டுப்பாடு,
பேரிடர் காலத்தில் மின்னல் வேகத்தில் களப்பணி,
கொரோனா காலத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கி ஆறுதல் அளித்த பணி
என ஏராளமான மக்களுக்கான தேவைகளைச் செய்திடும்
ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்.
இதன் உறுப்பினரான நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டுகால ஆட்சியில் தேசத்தில் எங்கும் மதக் கலவரங்களோ சாதிய மோதல்களோ துளியும் இல்லை என்பதே
நல்லாட்சியின் சிறப்பு.
நன்மை கடைப்பிடி என்றார் ஔவையார்,
நல்ல குணங்களை உறுதியாகப் பற்றிக் கொள் என்ற வார்த்தைக்கு வடிவம் தான் ஆர்எஸ்எஸ் என்பதை
இந்தப் பேரணி நிரூபித்துக் காட்டி இருக்கிறது என்றார்.
சின்மயா மிஷன் ஜித்தேஷ் சைதன்யா தேசியமும் தெய்வீகமும் என்ற தலைப்பில் ஆசியுரையும்
ஆனந்த் ஜி அவர்கள் விளக்க உரையும் ஆற்றினர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் ஏந்தி வந்த காவிக் கொடிக்கு வழியில் 24 இடங்களில் மகளிர் அணியினர் குடும்பத்தினர் சூழ மலர் தூவி வணங்கினர்.








No comments:

Post a Comment