Saturday 11 November 2023

பேராற்றல் மிக்க எளிய குடும்பத்தின் சாதனையாளர்கள் வாழியவே

 பேராற்றல் மிக்க

எளிய குடும்பத்தின்
சாதனையாளர்கள் வாழியவே
கல்வியே உலகை ஆளும் என நிருபித்த புகைப்படம் தான் கீழே இருப்பது.
இங்கு கல்வி என்பது அறிவு, ஞானத்தை குறிப்பதாகும்.
இவர்கள் வீட்டில் சும்மாவே டிவி பார்த்து
பொழுது போக்கிறார்கள் அவர்களை ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள அந்த அன்னை நாகலட்சுமி முடிவு செய்து
செஸ் விளையாட பயிற்சி மையத்தில் சேர்த்து விடுகிறார் அந்த அன்னை.
செஸ் என்பது விளையாட்டு என்று சொன்னாலும் அது ஒருவருடைய மதி நுட்பத்தினை வெளியே அறியச் செய்யும் விளையாட்டு.
ஆரம்பத்தில் அந்த அம்மாவுக்கு தெரியாது,
நாளை அவரின் இரு குழந்தைகளை பார்த்து இந்த உலகமே தூக்கி கொண்டாடும் என்று.
அந்த அன்னை தன் குழந்தைகளுக்கு செஸ் விளையாட எதுவும் தடையாக இருக்ககூடாது என்பதால், அவர் வீட்டில் டிவி பார்ப்பது இல்லை , ஏன் வீட்டுக்கு வரும் உறவினர்களை கூட வெளியே வைத்து பேசி அனுப்பி விடுவாராம்.
கொண்ட கொள்கையில் உறுதியாக
செயல்படுத்த சின்ன சின்ன ஆசைகளை விட்டுக்கொடுத்ததால் இமலாய வெற்றி பெறலாம் என்பதை
நமக்கு நிருபித்தவர் அவர்.
அம்மா, அப்பா, இந்த இரு குழந்தைகள் எப்போது பார்த்தாலும் எளிமையான தோற்றம்.
எந்த பந்தாவும் எந்த வெற்றி பெற்ற போதும் செய்தது இல்லை.
அந்த அன்னை கூட உலக அரங்கில் பெரிய அரங்கத்தில் தன் மகன் விளையாடும் போது மிக எளிமையான புடவையே அனிந்து இருந்தார்.
உணவு முறையும் எப்போதும் ஒரே மாதிரி
வீட்டில் சாப்பிட்டது போல்.
இதற்காக இந்த அன்னை எங்கு சென்றாலும் கையோடு அரிசி பருப்பு எடுத்து சென்று இருக்கிறார் அவரே சமைக்க.
எளிய குடும்பமாக இருந்தாலும்
உலக அளவில் சாதிக்கலாம்
அதிலே தீவிர முயற்சி எடுத்தால் என்பதை
நிருபித்து இருக்கிறார்.
உலகிலே முதல் முறையாக
தன் இரு குழந்தைகளையும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற வைத்தவர் என்ற பெருமையை பெறுகிறார் திருமதி.
நாகலட்சுமி என்கிற அந்த அன்னை.
அந்த இரு குழந்தைகள் தான்
கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும்
அவரின் தம்பி கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.
முயற்சி திருவினையாக்கும் என்பதை
நிருபித்து இருக்கிறார் அவர்.
வாழ்த்துக்கள்.
படம்.
கிராண்ட் மாஸ்டர் ஆனவுடன் அக்கா
ஏற்கனவே கிராண்ட் மாஸ்டர் தன் தம்பியோடு எடுத்துக் கொண்ட ஃபோட்டோ.
அனைத்து போட்டிகளிலும் வெற்றி கண்டு நம் தேசத்திற்குப் பெருமை சேர்த்திட வாழ்த்துகள்.
பகிர்வு


No comments:

Post a Comment