Friday 10 November 2023

நன்மைக்கு உதவி . .

 நன்மைக்கு உதவி . .

*நீங்கள் செய்யும் தவறுக்கு
எதிர்பாராத நேரத்தில் தண்டனையும்,*
*நீங்கள் செய்யும் நன்மைக்கு
தக்க சமயத்தில்
உதவியும்
நிச்சயம் கிடைக்கும்.*
*மண்ணில் பிறப்பதும் இறப்பதும்
உன் கையில் இல்லை.*
*வாழ்வதும் வீழ்வதும்
உன் கைகளில் தான்.*
*தேவையான இடத்தில்
முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்,*
*வார்த்தையும் வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய் விடும்.*
*சிந்தித்துக் கொண்டே இருங்கள்.*
*வெற்றி நிச்சயம்.*
*எதற்கும்
எப்போதும்
தயாராக இருங்கள்.*
*சில நேரங்களில் நீங்கள் யூகிக்க முடியாதப் பல விஷயங்கள்
உங்களுக்கு எதிராய்த் திரும்பும்*
*கடந்து போகக் கற்று கொள்ளுங்கள்*
*மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயங்கள் தேடிக்கொண்டிருந்தால்
நிம்மதி இருக்காது. *
*ஒவ்வொரு
மாற்றத்திற்கும்
ஒரு காரணம் உண்டு.*
*காரணமின்றி
விளைவில்லை
நிரந்தரமானது
என்று எதையும் ஏற்க முடியாது.*

No comments:

Post a Comment