Saturday 18 November 2023

சிறப்பான வாழ்க்கை . .

சிறப்பான வாழ்க்கை . .
*இப்போது
நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அதுவே
சிறப்பான வாழ்க்கைதான்
என்பதை உணரவேண்டும்.
*ஒரு பெரிய வீட்டில் ஆடு , மாடு, நாய்கள் , இருப்பதை அருகில் சிறிய வீட்டில் இருக்கும் ஒரு குட்டி எலி கவனித்து வந்தது அதற்கு நீண்ட நாட்கள் ஆசை
*அதாவது இந்த விலங்குகள் எல்லாம் பெரிய வீட்டில் வசதியாக ஆடிப் பாடி திரிகிறதே, ஆனால் நமக்கு மட்டும் வீடு அப்படி இல்லாமல் மிகவும் சிறியதாக இருக்கிறதே என்று.
*இங்கே நம் வீட்டில் ஓடி, ஆட இடமே இல்லையே என்று மிகவும் வருத்தம் , உடனே ஒரு நாள் தன்னுடைய தாயிடம் கேட்டது இந்த குட்டி எலி.
*அம்மா ஏன் நமக்கு மட்டும் இப்படி ஒரு படைப்பு நமக்கும் பெரிய வீடு இருந்தால் நாமும் மற்ற விலங்குகள் போல சந்தோசமாக இருக்கலாம் அல்லவா என்று கேட்க,
*அதற்குத் தாய் எலி அமைதியாக இதற்கான காரணத்தை நீயே விரைவில் உணர்ந்துகொள்வாய் என்று கூறியது, இப்படியே சில நாட்கள் போனது
*ஒருநாள் அந்த குட்டி எலி வெளியே சுற்றித் திரியும்போது அந்த வழியாக வந்த பூனை அதைப் பார்த்து துரத்த ஆரம்பித்தது , உடனே உயிர் பயத்தில் அந்த குட்டி எலி அந்த பெரிய பங்களாவின் தோட்டத்தில் போனது அங்கேயும் அந்தப் பூனை விடவில்லை
*மீண்டும் விடாப்பிடியாக துரத்தியது கடைசியில் அந்த குட்டி எலி தன்னுடைய சிறிய வீட்டிற்குள்ளே புகுந்தது.
*இப்போது அந்த பூனையால் உள்ளே நுழைய முடியாமல் ஏமாந்து விட்டுச் சென்றது.
*இதைக் கண்ட அந்த தாய் எலி கூறியது , இப்போது இந்த சிறிய வீட்டின் அருமை புரிகிறதா எதையும் அதன் அருமை புரியாமல் ஏளனமாக பார்க்கக் கூடாது , இந்த சிறிய வீடு இல்லையென்றால் இன்று நீ உயிரோடு இருக்கமாட்டாய் என்று கூறி அந்த குட்டி எலிக்குப் புரியவைத்தது .
*இதை உணர்ந்த அந்த குட்டி எலியும் தன் ஆசைகளைக் குறைத்து சிறிய வீட்டிலே மகிழ்ச்சியோடு வாழ்ந்தது.
*இப்படித்தான் நாமும் ,
*இருக்கும் இடத்தில் இருக்கின்ற சிறப்புகளை அறியாமல் எதை எதையோ தேடுகிறோம் மற்றும் இறைவனையும் குறை கூறுகிறோம்
*நமக்குச் செல்வாக்கு ,
பணம் ,புகழ்
கிடைத்தால் அதோடு
நிம்மதி இல்லாத வாழ்க்கை அமையும் என்பதை உணர வேண்டும்.
*நமக்கு இறைவன் கொடுக்காத
ஒன்றைப் பற்றி கவலைப் படவேண்டாம் , ஒருவேளை நாம் கேட்கும் ஒன்று கிடைத்தால் அதனால் நமது உயிருக்கே ஆபத்து கூட இருக்கலாம். (அது பணம் , நண்பர்கள் , சொத்து , சொந்தம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்)
*இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அதுவே சிறப்பான வாழ்க்கை தான் என்பதை
உணர வேண்டும்.
*சிலர் சொல்லுவாங்க தனியாக இருக்கிறான், யாரும் இல்லை என்று ஒருவேளை நிறைய நண்பர்கள் இருந்து அவர்கள் உங்களை மதிக்காமல் , அவர்களால் உங்கள் வாழ்க்கையே சீரழிந்தால் என்ன செய்ய முடியும்.
*எனவே சிலநேரத்தில்
சிலர் இல்லாமல் இருப்பதும் நன்மைக்கே என்று தயவுசெய்து
புரிந்து கொள்ளுங்கள்.
*எல்லாத்துக்கும் மிகப் பெரிய காரணம் இருக்கலாம் , நாம் இப்போது அனுபவிக்கும் சிறிய வலிகளுக்கு பின்னால் இறைவன் மிகப் பெரிய நம்மால் தாங்க முடியாத வலிகளை மறைத்துக்கூட வைக்கலாம் .
*எனவே எதையும் ஏற்றுக்கொண்டு இருப்பதை வைத்துச் சிறப்போடு
வாழக் கற்றுக்கொள்வோம் ,
நாம் இப்போது
என்ன நிலையில் இருக்கிறோமோ அதுவே சிறந்த ஒன்றுதான்
என்பதை உணர்வோம் .

No comments:

Post a Comment