Thursday 16 November 2023

வேறு வேறு வழிகள்

 வேறு வேறு வழிகள் .

ஒரு குட்டிக்கதை.
காட்டுக்கு நடுவுல ஒரு அஞ்சு பேரு வழிதவறி மாட்டிக்கறாங்க.
மேப்பு, காம்பஸ்சுன்னு எதுவும் உதவிக்கு இல்ல.
எந்த திசையில போறதுன்னு யோசிக்கறப்ப, அவங்கவங்களுக்கு தோணியபடி பண்றாங்க.
ஒருத்தன் இடப்பக்கம்,
ஒருத்தன் வலப்பக்கம்,
ஒருத்தன் போய்கிட்டிருந்த அதே திசையில்,
அப்புறம் ஒருத்தன் வந்த வழியே திரும்பி போக முடிவு பண்றாங்க.
இந்த gut feeling, instincts, குருட்டாம்போக்கு, என்று அவங்க எல்லோரும் ஒரு காரணத்த சொல்லி அதன்படி பிரிஞ்சி போறாங்க.
கடைசி ஆள் மட்டும் என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கிறான்.
அப்புறம் நிதானமா யோசிச்சிப் பாக்கறான்.
அறிவுபூர்வமா சிந்திச்சிப் பாக்கறான். உயரமா இருக்கற ஒரு மரத்துல ஏறி சுத்தி முத்தி பாத்தான். ஒரு திக்குல ஏதோ கிராமம் இருக்கற மாதிரி தெரிஞ்சது. கூரைகள், புகை, ஒத்தயடிப்பாதை எல்லாம் தெரிய, அந்த திக்குல போறான்.
ஒங்க கேள்விக்கு இப்போ பதில் கிடைச்சிருக்கும்.
வெயிட்,
வணக்கம் கதை இன்னும் முடியல.
மத்த நாலு பேரும் என்ன ஆனாங்கன்னு தெரியாம இவரு மட்டும்தான் டாப்பு டக்கரு பேர்வழின்னு நாம எல்லோரும் முடிவு பண்ணிடறது தான் நம்மோட பொதுவான குறைபாடு.
அஞ்சாவது ஆள் மட்டும்தான் உருப்பட்டாப்லன்னு நாமளா நினைச்சுக்க வேண்டியது. மத்தவனெல்லாம் வீணாப்போனவன்னு முடிவு பண்ணிடுறது.
ஏங்க...ஏன்.
லெப்டுல போனவன் ஒரு அரிதான மூலிகையைக் கண்டுபுடிச்சான்.
ரைட்டுல போனவன் ஒரு ஓநாய் கூட்டத்துல மாட்டி தப்பிச்சி அடுத்த நகரம் போய்விட்டான்.
வந்த வழி திரும்பி போனவன் தொலஞ்சி போன வேற குரூப்பை சந்திக்கிறான்; அவங்க வந்த பாதை, இவன் வந்து போன பாதை எல்லாத்தையும் கம்பேர் பண்ணி எலிமினேஷன் முறையில வழி கண்டுபிடிச்சிடறாங்க. சிறந்த நண்பர்களும் ஆய்டறாங்க.
நேரா போனவன் ஒரு countryside குடும்பத்தை சந்திக்கிறான், நிம்மதியாக வாழறான்.
ஒவ்வொருத்தனுக்கும்
ஒவ்வொன்னு கிடைச்சது.
அப்புறம் நம்மாளு - மரத்துல ஏறி வழி கண்டுபிடிச்சு அந்த கிராமத்துக்கு போயி, தன்னோட ஊருக்கு/வீட்டுக்கும் பத்திரமா போய் சேர்ந்துடுறார்.
இந்த *"பத்திரமா வீடு போய் சேர்ரதை மட்டும் தான்" நாம எல்லோரும் வெற்றி / முன்னேற்றம் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கறோம். ஆனா இந்த ஐந்து நபரும் வெற்றி பெற்று உள்ளனர். ஆனால் வேறு வேறு வழிகளில்.*
*எல்லோருக்கும் வாழ்க்கை வெவ்வேறானது. இங்க முன்னேறாதவன் /தோத்தவன்னு எவனுமே கிடையாது.*

No comments:

Post a Comment