Tuesday 14 November 2023

மகிழ்ச்சி நிலைக்கட்டும்.

 மகிழ்ச்சி நிலைக்கட்டும்.

நேர்மையான
மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
நாணயமான
மகிழ்ச்சி நீடித்திருக்கும்.
நம்பிக்கையான
மகிழ்ச்சி உற்சாகம் தரும்.
கடந்து போன மகிழ்ச்சி
கலகலப்பாக்கும்.
எதிர்கால
மகிழ்ச்சி
இன்பத்தை தரும்.
இறைவனுடன்
மகிழ்ச்சி
பேரின்பமாகும்.
மனிதனுடன்
மகிழ்ச்சி
சூழ்நிலைக்கு மட்டும்.
நண்பனுடன்
மகிழ்ச்சி
கவலையை நீக்கும்.
உறவினர்
மகிழ்ச்சி
ஒன்று சேரும்போது மட்டும்.
பயணத்தின்
மகிழ்ச்சி நினைவினால் மட்டும்.
எதிரியின்
மகிழ்ச்சி உன் துன்பத்தில் மட்டும்.
எதிர்பார்ப்பின்
மகிழ்ச்சி நம்பினால் மட்டும்.
வாழ்வின்
மகிழ்ச்சி நிச்சயத்தினால் மட்டும்.
நிலையான
மகிழ்ச்சி நிம்மதியால் மட்டும்.
உனது மகிழ்ச்சி
உனது உண்மையால் மட்டும்.
மகிழ்ச்சி என்பது
சூழ்நிலைக்கேற்ப மாற்றம்
அடையலாம்.
ஆனால்,
மனதில் எண்ணங்கள்
தனக்கும் பிறருக்கும் சுபமாக இருப்பதுடன்
அது தந்தை ஈசனின் நினைவினால் என்றும் நிறைந்திருக்கும் என்றால் அதைவிட
மகிழ்ச்சி
உலகில் நிரந்தரமானது வேறில்லை.

No comments:

Post a Comment