Thursday 2 November 2023

தி தனலட்சுமி ஏஜென்சீஸ் திறப்பு விழா. இன்று காலை மதுரை வக்கீல் புதுத் தெருவில் அருமைச் சகோதரர் ஆயுர்வேத வைத்தியர் பி ஆர். செல்வசரவணன் புதிதாகத் திறந்துள்ள ஆயுர்வேத உலகம் தி தனலட்சுமி ஏஜென்சீஸ் நிறுவனத்தில் இன்று மாலை மனிதத்தேனீ சென்று டாக்டர் ஆர் எஸ் ராம்குமார் அவர்களிடம் வாழ்த்து தெரிவித்த மகிழ்வான தருணம். இவரது தந்தை பி. ராமானுஜதாஸ் அவர்கள் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கோடி அர்ச்சனை பாராயண பக்த சபையின் நிர்வாகியாகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய மாமனிதர். இவரது அண்ணன் வைத்தியர் பி ஆர். சோலை ராம்தாஸ் மற்றும் உள்ளிட்ட உறவினர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். கடந்த அரை நூற்றாண்டுகளாக இந்தத் துறையில் வெற்றிகரமாக உள்ளார்கள். வாழிய புதிய நிறுவனம் வாழியவே.

 




No comments:

Post a Comment