Thursday 2 November 2023

*மனம் கலங்காதிருக்க*

 *மனம் கலங்காதிருக்க*

தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...
சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...
பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...
உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...
அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
*பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...
இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...
தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை...
ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
*கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...
பிறவிக் குருடனாக
இருந்தபோதிலும்
*சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...
மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...
கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
*குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...
இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
*சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...
கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
*ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...
மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...
பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*பூந்தானம்* மனம் கலங்கவில்லை...
கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...
நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...
சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...
*எப்படி முடிந்தது இவர்களால்..?*
*ரகசியம்*
*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்*
*கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?*
*ஆழ்ந்த நம்பிக்கை...*
*அந்த நம்பிக்கை ஏற்பட வழி?*
*முதல் வழி...*
(சொல்லறிவு)
*அறிஞர்கள், ஞானிகள் மற்றும்*
*சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்*
*இரண்டாம் வழி...*
(சுய அறிவு)
*மன அமைதியுடன்*
*நடுநிலை உணர்வுடன் ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது*
*நம்பிக்கை ஏற்பட்ட பின்*>
*மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக*
*தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்*
*அந்த பிரார்த்தனைகள்*
*மந்திரமாக இருக்கலாம்...*
*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*
மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."* இருக்கலாம்.
இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...
என்ன நடத்தாலும்,
எதை இழந்தாலும்,
*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*
*அந்த ஆத்ம பலமே*
*எதையும் தாங்கும் சக்தி*
*ஆதலால்*
*திடமாக பகவானை வழிபடுவோம்...*
*அன்பே கடவுள் என போற்றுவோம்...*
*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*
*இதனால் பெற்றிடுவோம்*
*மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்*

No comments:

Post a Comment