Wednesday 1 November 2023

வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்றிடலாம்.

 வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்றிடலாம்.

7 சொற்களில் வாழ்க்கை..*
வாழ்க்கை என்பது என்ன.
பிறந்தார்,
படித்தார்,
வேலை பார்த்தார்,
மணந்தார்,
பிள்ளைகள் பெற்றார்,
மூப்பு அடைந்தார்,
இறந்தார்.
அவ்வளவு தான்.
7 சொற்களில்
வாழ்க்கை முடிந்து விட்டது.
வேறு ஏதாவது நடக்கிறதா.
நம் வாழ்க்கை
எல்லாம் இந்த சொற்களாய் போய் விட்டது.
வேறு ஒன்றும் இல்லை.
இப்படி
என் வாழ்வும் போய் விடக் கூடாது.
நான் இந்தச் சூழலில் இருந்து
தப்பிக்க வழி சொல்
என்று இறைவனை வேண்டுகிறார் எம்பிரான் #சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
"மலையில் இருந்து அகிலும், ஒளி வீசும் மணிகளையும் கலந்து வரும் ஆற்றின் கரையில் இருக்கும் நெல் வாய் என்ற ஊரில் உறைபவனே, இந்தப் பிறவியில் பிறந்து, வளர்ந்து, மூப்பு அடைந்து, இறந்து போகும் இந்த சூழலில் இருந்து நான் உய்ய வழி சொல்வாய்"
என்கிறார் ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்.
ஒருவன்
ரொம்ப கஷ்டப்பட்டு
ஒரு வீடு கட்டினான்.
சிறுகச் சிறுக சேர்த்துக் கட்டிய வீடு.
பார்த்துப் பார்த்து கட்டினான்.
வீடு அருமையாக வந்து விட்டது.
அவனுக்குப் பெருமை தாங்கவில்லை.
தன் வீட்டைப் பார்த்து பார்த்து பெருமிதம் கொள்கிறான்.
காலையிலும் மாலையிலும் வீட்டின் முன்புறம் நடப்பான்.
வருகிற போகிற ஆட்களைப் பார்ப்பான்.
முற்றத்தில் அமர்ந்து செய்தித்தாள் படிப்பான்.
நல்ல உடை
உடுத்திக் கொண்டு வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பான்.
கொஞ்ச நாள் கழித்து
வயதாகிப் போனது.
அடிக்கடி வெளியே வர முடியவில்லை.
படுத்த படுக்கையாகி விட்டான்.
சில வருடங்களில் இறந்தும் போனான்.
இப்போது மேலே சொன்ன தேவாரப் பாடலை பாருங்கள்.
*"நல்வாயில்
செய்தார் நடந்தார்
உடுத்தார்*
*நரைத்தார் இறந்தா ரென்று"*
வீட்டைக் கட்டி வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து உடை உடுத்தி நரை பருவம் எய்தி இறந்து போனான்.
வீடு என்பது இங்கே ஒரு உவமை.
வீடுதான் நம் உடம்பு. வீட்டைக் கட்டி,
நடத்தல் ,படித்தல், வேலையை செய்தல் போன்றவை.
உடுத்தார் , அனுபவித்தல், மனைவி, மக்கள், சுற்றம், செல்வம் என்று கொஞ்ச நாள் அனுபவித்து, நரைத்தல் - வயதாகிப் போதல்
இறத்தல் - முடிவு
இப்படியா நம் வாழ்க்கையும் செக்கு மாடு போல இந்த வட்டத்துக்குள் சுத்திச் சுத்தி வர வேண்டும்.
இதைத் தானே
பலரும் செய்கிறார்கள்.
பத்தோடு பதினொன்றாக நாமும் அப்படியே போக வேண்டியது தானா.
பிறந்தான், வளர்ந்தான், இறந்தான் என்று ஒரு முக்கியத்துவம் இல்லாமல், பயனின்றி இந்த வாழ்க்கை முடிய வேண்டுமா.
நான் உய்ய வழி சொல் என்று சுந்தரர் பெருமான் வேண்டுகிறார்.

No comments:

Post a Comment