Saturday 15 October 2022

மனிதனாக வாழ வேண்டும் .

 மனிதனாக வாழ வேண்டும் .

சரி சிறந்த மனிதனாக வாழ்வது எப்படி ?
எல்லா உயிர் இனங்களைக் காட்டிலும் உயர்ந்த அறிவு மனிதனுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு எல்லா வசதிகளும் கொடுக்கப்பட்டு உள்ளது .
மனிதன் அனுபவிக்கலாம் ஆனால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பது இயற்கையின் சட்டமாகும்.
அடுத்து சாதி,சமய ,மதக் கொள்கைகளை மனிதனால் உருவாக்கியதாகும். அதைப் பிடித்துக் கொண்டு மனிதன் தற்போது அழிந்து கொண்டு இருக்கிறான்.
அவற்றை முழுவதும் விட்டு விட்டால் ,மனிதன் மனிதனாக வாழ்ந்தவனாகக் கருதப்படுவான் ,
அடுத்துப் பொருள். அனைருக்கும் பொதுவானது. அதை அனைவருக்கும் பொதுவாக, சமமாக பகிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும், அதுவே மனிதப் பண்பாகும்.
உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது பொருளின் அதாவது பணத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது ,அந்த நிலையை மாற்றுவது மனிதப் பண்பாகும்.
எவ்வளவு தான் பணம், பட்டம், பதவி,படிப்பு இருந்தாலும் எல்லோரும் இறுதியில் மரணம் என்னும் பிணியில் அகப்பட்டு அழிந்து விடுகிறோம்.
அந்தப் பணமோ, பதவியோ, மரணத்தைக் காப்பாற்றுவது இல்லை .
மரணத்தைக் காப்பாற்றாத, பணம், பதவி இருந்து என்ன பயன்? என்பதை மனிதனாகப் பிறந்த அனைவரும் சிந்திக்க வேண்டும். இவையே மனிதப் பண்பாகும் ,
மனிதன் பிறக்கிறான்; பணத்தைத் தேடி அலைகிறான்; பெண்ணாசை, மண்ணாசை அவனை வாட்டி வதைக்கிறது.
இதற்கெல்லாம் அடிமையாகி, இந்த உலக வாழ்வே நிரந்தரம் எனக் கருதி இங்கேயே தங்கி விட நினைக்கிறான்.
தன் ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, பல தவறுகளைச் செய்கிறான்.
தான் வாழ வந்த இந்த உலகம், ஒரு வாடகை வீடு என்பதை அவன் உணர்வதில்லை.
மனிதன் காலப்போக்கில் மனிதநேயம் மறந்து, பொருட்களின் மீது நாட்டம் கொண்டு மனிதன் மனிதனாக வாழ மறந்து வருகிறான்.
பொருட்கள் நிரந்தரம் அல்ல, மனித வாழ்வும் நிரந்தரம் அல்ல என்பதை உணர வேண்டும்.
மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்தல் வேண்டும்.
அப்படி செய்வதால் நமக்கும் மன நிறைவு கிடைக்கும்
வந்தோம் , பிறந்தோம் , வாழ்ந்தோம், சென்றோம் என்று இல்லாமல், அடுத்த வரும் நம் தலைமுறை நன்கு வாழ்ந்திட அவர்களுக்கு நல்ல வழி வகைகள் செய்வோம்.

No comments:

Post a Comment