Saturday 29 October 2022

அமைதியும் ஆரோக்கியமும் .

 அமைதியும் ஆரோக்கியமும் .

ஒன்று வாங்கினால்
மற்றொன்று இலவசம்
என்பது வியாபாரதில் மட்டுமல்ல,
வாழ்க்கையிலும்
பல சமயம் நடக்கின்றது.
உதாரணத்திற்கு
கோபத்தை வாங்கினால்
இரத்தக் கொதிப்பு இலவசம்
பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்
வெறுப்பை வாங்கினால்,
வேண்டாத பகை இலவசம்
கவலையை வாங்கினால்,
கண்ணீர் இலவசம்.
மாறாக
நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்
உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்
அமைதியை வாங்கினால்,
ஆனந்தம் இலவசம்
நேர்மையை வாங்கினால்,
நித்திரை இலவசம்
அன்பை வாங்கினால்
அனைத்து நன்மைகளும் இலவசம்.
இலவசமாக எது வேண்டுமென்று
முடிவு செய்யுங்கள்
பய உணர்வு இல்லாத
மனிதன் இவ்வுலகில் இல்லை.
பயம் துரத்தும் போது
பதட்டத்துடன், கூடவே
மனதின் ஓரத்தில்
நம்பிக்கையும் துளிர்க்கிறது.
பயம் துரத்தும்போது
தைரியமான முடிவு எடுப்போம்.
மனதில்
உறுதி உள்ளவர்கள்
பயப்படுவதில்லை
அவர்களுக்குத் தைரியமே துணை.

No comments:

Post a Comment