Wednesday 26 October 2022

பல்லக்குத் தூக்கிகளாக இருக்க வேண்டாம்.

 பல்லக்குத் தூக்கிகளாக இருக்க வேண்டாம்.

நாம் எப்போதுமே தனி மனிதன்தான்
சுற்றம் நண்பர்கள் என்று ஜமா சேர்த்துக் கொண்டு இதுதான் உலகம் என்று நம்பி கொண்டிருக்கிறோம்.
வந்ததும் தனியேதான்,
செல்வதும் தனியேதான்.
ஆடும் ஆட்டம் எல்லாம் இதை மறந்தே.
பிரச்னை வந்தால் நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.
அவன் வருவான் இவன் வருவான் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
எல்லோருக்கும் அவரவர் கவலை சிந்தனை செயல்.
அனுபவ உரைகளை கடன் வாங்கினாலும், சரியா என்று உங்கள் உலையில் போட்டு நீங்கள்தான் தட்டிப் பார்க்க வேண்டும்.
நான் இருக்கிறேன் என்று வீரம் பேசுபவர்கள் எல்லாம் பிரச்சனை எல்லை மீறினால் காற்றோடு கரைந்து போவார்கள்.
மற்றவர்கள் சிந்தனைகளையே பல்லக்கு தூக்கினால், நீங்கள் என்றும் பல்லக்கு தூக்கிகளே. பல்லக்கில் உட்காரும் வரம் கிட்டாது.
நெட்டையோ, குட்டையோ நன்கு யோசித்து முடிவெடுங்கள்.
வெற்றி கிடைத்தால் OK, இல்லையேல் அனுபவம். இந்த எண்ணக் குறியீடு மிகவும் அவசியம்.
Corporate அலுவலகத்தில் பார்த்திருப்பீர்கள்.
ஒரு Team அதற்கு ஒரு Team manager.
எடுக்கும் முடிவுகள் வெற்றி பெற்றால் Team க்கு கிடைத்த வெற்றி. தோல்வி என்றால் Team manager பலிகடா.
நம் வாழ்வு நம் கையில்தான். வாழ்க்கை
Car stearingஐ மற்றவர் கையில் கொடுத்து விட்டு, வேடிக்கை பார்த்தால், வாழ்வே வேடிக்கையாகிவிடும்.
தொழிற்கூடத்தில் ஒரு தாரக மந்திரம் ஒன்றுண்டு.
யோசித்து நீயே செய். தவறு செய்தால் மறைக்காதே. ஒத்துக் கொள். அந்தத் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்.
School பையன் போல எல்லாவற்றிற்கும் வாத்தியாரிடமே வந்து நிற்காதே. ஆரம்பத்தில் கற்று கொடுப்போம். பின் யோசித்து உன் திறமையைக் கலந்து செயலைச் செய்ய வேண்டியதுதான்.
தொழிற்கூடத்தில் மட்டுமல்ல. வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே.
கற்றதை வைத்து யோசித்து சுய முடிவு எடுங்கள்.
மற்றவர்கள் அனுபவத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment