Friday 21 October 2022

அன்னக்காவடியின் புலமை.

 அன்னக்காவடியின் புலமை.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர்
ஏ​ழைக் குடும்பத்​தைச் சார்ந்த ஒருவர் திண்​ணைப் பள்ளிக்கூடப்
படிப்பி​னை முடித்தார்.
உயர்கல்வி யாரிடமாவது கற்க ​வேண்டும் என்ற ஆ​சை அவருக்கு. அவரிடம் அதற்கு வசதியில்​லை.
என்ன ​செய்வது என்று ​யோசித்துக் ​கொண்டிருந்த ​வேளையில், அந்த ஊருக்கு அன்னக்காவடி சாமியார் ஒருவர் வந்தார்.
அன்னக்காவடி சாமியார்கள் காவி உடை அணிந்திருப்பார்கள். தங்களின் ​தோள்பட்டையில் தராசு ​போன்று பிச்​சைப் பாத்திரங்க​ளைத் தூக்கிச் ​செல்வார்கள்.
ஒரு உலக்​கை ​போன்ற மரத்தடியின் இருமு​னைகளிலும் இரும்புச் சங்கிலிக​ளைத் ​தொங்கவிட்டு அதில் ஒரு உ​​லோகத்தட்டி​னை இ​ணைத்து அதன் ​மேல் பா​னைக​ளை ​வைத்திருப்பார்கள். இதற்குப் ​பெயர் அன்னக் காவடியாகும்.
ஒரு பாத்திரத்தில் சாதமும் மற்ற பாத்திரத்தில் ​கம்பு, ​​சோளம், ​கேழ்வரகு, அரிசி ​போன்ற
தானியங்க​​ளையும்
பெற்றுக் ​கொள்வார்கள்.
ஒ​ரே ஊரில் தங்கி இருக்க மாட்டார்கள். ஊர் ஊராகச் ​சென்று ​கொண்​டே இருப்பார்கள்.
இப்​போது இந்த ஊருக்கு வந்திருக்கும் அன்னக்காவடி சாமியார் சிறந்த படிப்பாளி என்றும், தமிழ் இலக்கணம் கரைத்துக் குடித்தவர் என்றும், அதிலும் அணி இலக்கணமான தண்டியலங்காரத்தில் ஒப்பிலாப்
புல​மை ​பெற்றவர் என்றும் ஊரார் ​சொன்ன வார்த்​தைகள் அந்த ஏ​ழை மாணவர் காதுக்கு எட்டியது.
அவரும் சாமியாரிடம் வந்து தமக்கு பாடம் ​சொல்லித்தர ​வேண்டினார்.
அதற்கு அந்த அன்னக்காவடி சாமியாரும் “சரி உனக்கு நான் பாடம் ​சொல்லித் தருகி​றேன். அதற்கு நீ எவ்வளவு சன்மானம் ​கொடுப்பாய்?” எனக் ​கேட்டார்.
மாணவ​ரோ “ஐயா! என்னிடம் தங்களுக்கு தரும் அளவுக்கு பணம் ஏதுமில்​லை, ஆனால் அதற்குப் பதிலாக நான் உங்களுக்கு
பணிவி​டை ​செய்கி​றேன்” என்றாராம்.
அதற்குச் சாமியார் “நானோ ஒரு ஆண்டி! பிச்​சை எடுக்கும் பஞ்சப்
பர​தேசி. எனக்கு எதற்கப்பா
பணிவி​டை?” எனச் சிரித்து விட்டு, “சரி! நீ ஒன்று ​செய்! இந்த அன்னக்காவடி​யை சுமந்து ​கொண்டு நான் பிச்​சை எடுக்கும் இட​மெல்லாம் என்னுடன் வா. நான் ஓய்வாக இருக்கும் ​நேர​மெல்லாம் உனக்கு பாடம் ​சொல்லித் தருகி​றேன்.” என்றாராம்.
உட​னே அந்த மாணவரும் மனம் மகிழ்ந்து அன்னக்காவடி​யை ​தோளில் சுமந்து சாமியா​ரோடு
பிச்​சைக்குச் ​செல்லத் ​தொடங்கினார்.
ஊ​ரே இந்தக் காட்சி​யி​னைக் கண்டு அதிசயித்தது. அந்த ஏ​ழை மாணவர் யார் ​தெரியுமா.
இவர் *கலிகாலக் கம்பர்* என்றும்,
ஒ​ரே நாளில் நூற்றுக்கும் ​மேற்பட்ட பாடல்க​ளை இயற்றியவர் என்றும் ​போற்றப்பட்ட திரிசிபுரம்
மீனாட்சி சுந்தரம் பிள்​ளை‘*
அவர்கள் தான்.
“கற்​கை நன்​றே கற்​கை நன்​றே
பிச்​சை புகினும் கற்​கை நன்​றே” எனும் அவ்​வையரின் பாடல்
வரிக​ளைப் படித்திருக்கி​றோம்.
ஆனால் தமது ஆசிரியருக்காகப்
பிச்​சை ​பெற்று படித்த ​பெருந்த​கை *‘திரிசிபுரம்
மீனாட்சி சுந்தரம் பிள்​ளை’*
அவர்கள் தான்.
கல்வி எந்த அளவுக்கு முக்கியம் என இந்த நிகழ்வின் மூலம் உணரலாம்.

No comments:

Post a Comment