Friday 21 October 2022

நம் உழைப்பு மட்டுமே நம் தகுதியைத் தீர்மானிக்கிறது.

 நம் உழைப்பு மட்டுமே

நம் தகுதியைத் தீர்மானிக்கிறது.
சரியாய் பேசுகிறோமா என்பதை விட
சரியானவரிடம் தான் பேசுகிறோமா என்பது தான் முக்கியம் .
வாழ்ந்து கெட்டவர்கள் பழசை நினைக்காதீர்கள். வாழ்வு வந்தவர்கள் பழசை மறக்காதீர்கள்.
வீழ்ந்தாலும் எழுவேன் என்று நீங்கள் நினைத்து மீண்டும் எழுந்தால், உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை அப்போது தான் ஆரம்பம் என்று அர்த்தம்.
உங்கள் கஷ்டத்தில் கை கொடுத்தவர்களையும், உங்கள் கஷ்டத்துக்கு காரணமானவர்களையும்
என்றுமே மறவாதீர்கள்.
இறைவன் ஒரு பொழுதும் கஷ்டத்தை தருவதில்லை.
நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளைத திருத்திக் கொள்ளவும், உங்களையும் உங்களைச் சூழ்ந்து உள்ளவற்றையும் புரிந்து கொள்ள சில சந்தர்ப்பங்களைத் தருகிறார்.
நீங்கள் அதனைக் கடந்து செல்லுங்கள் வெற்றி மிக அருகில்.
முதலில் தாங்க முடியாததாக தோன்றும் .
பின் பரவாயில்லை போலத் தோன்றும் .
அடுத்து கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை வரும் .
இறுதியில் இதற்காகவா வருந்தினோம் என்று மனம் லேசாகிவிடும் .
இது தான் மனிதன் பிரச்சனையே .
நினைவுகள் எப்போதும் வித்தியாசமானவை
நாம் சிரித்த நாட்களை நினைத்து
அழ வைக்கும் .
அழுத நாட்களை நினைத்து
சிரிக்க வைக்கும் .
பிரச்சனைகள் நிச்சயம் சுட்டிக் காட்டப்பட வேண்டும் அப்போது உங்கள் மனதில் எவ்வித வெறுப்பும்
இல்லாதிருக்க வேண்டும்.
தவறான வழியில் நிகழ்த்திய செயல்களின் பலனும் தற்காலிகமானதே. இறுதியில் உண்மையே வெல்லும். அநீதியை எதிர்த்து உணர்ச்சிவசப்படால், விழிப்புணர்வோடு போராட வேண்டும்.
தோல்வியைக் கண்டு அஞ்ச வேண்டாம். தோற்றுப் போனாலும் துவளாமல் மீண்டும் முயலுங்கள். வாழ்வில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
எனக்குப் போராட வலிமை இல்லை, என்னால் எதுவும் செய்ய முடியாது என்று நீங்கள் உணரும்போது பிரார்த்தனை செய்யுங்கள்.

No comments:

Post a Comment