Thursday 13 October 2022

துணைத் தலைவர் பணியாற்றிட களம் காண்கின்றார் எங்கள் தங்கம் கிர்லோ வீரப்பன். காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிட திருப்பூர் மாநகரில் கிர்லோ கார்மெண்ட்ஸ் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் (200 பணியாளர்கள்) நிர்வாகி, திருப்பூர் நகரத்தார் சங்கத்தின் பேராற்றல் மிக்க மேனாள் தலைவர், நச்சாந்துபட்டி அடைக்கம்மை அப்பத்தாள் படைப்பு வீடு கட்டிடக் குழுவின் பொருளாளர், மற்றும் அடைக்கம்மை அப்பத்தாள் படைப்பு வீடு அறங்காவலர் . நச்சாந்துபட்டியில் தனது மனைவி பெயரில் ரூ ஐம்பது லட்சம் செலவில் மக்களுக்கான இலவச மருத்துவ மனை, எங்கள் 32 ஊர் நகரத்தார்கள் வழிபடும் துவார் அடைக்கம்மை அப்பத்தாள், ஆயாள், ஆத்தாள் உள்ள வள்ளிலிங்கம் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா (03-02-2023) குழுவின் பொருளாளர் என பல பணிகளில் நாள் தோறும் முத்திரை பதித்து வரும் அன்புச் சகோதரர் கிர்லோ வீரப்பன் அவர்கள் களம் காண்கின்றார். அவரது வெற்றிக்கு துணை நின்றிடுவோம். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment