Tuesday 11 October 2022

அதிகாரமும் அன்பும்.

 அதிகாரமும் அன்பும்.

இல்லாததைத் தேடுவதில் தவறில்லை.
இருப்பதை தொலைப்பது தான் தவறு.
வாழ்க்கையில் பணத்தை தொலைத்தவர்களை விட, பணத்துக்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் தான் அதிகம்.
பெருமைக்காக வாழாதீர்கள்.
மன நிம்மதிக்காக வாழ்ந்து பாருங்கள்.
உண்மையான சந்தோஷம் கிடைக்கும்.
சந்தோஷம் என்பது நீங்கள் வாழும் இடத்தில் இல்லை.
நீங்கள் வாழும் விதத்தில் தான் உள்ளது.
பிறருடைய மனதைக் கவர்வது நம்முடைய அறிவோ, அழகோ அல்ல .
நாம் பழகும் விதமும்,
பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமைக்கும் .
உண்மையைச் சொல்வதற்கு
அதிகமான
தைரியம் தேவை.
உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு
அதைவிட இன்னும்
அதிகமான
தைரியம் தேவை.
கெடுதல் செய்யத்தான்
அதிகாரம் தேவைப்படும்.
மற்றபடி அன்பிருந்தால்
எதையும் சாதிக்கலாம்.
ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான வாய்ப்பே.
ஏனெனில் எந்த நொடியிலும் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ள முடியும்.
கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துங்கள்.
வாய்ப்புகளே இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.
இழந்த இடத்தை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம்.
ஆனால் இழந்த நேரத்தையும் காலத்தையும் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது.
சிந்தித்துச் செயல்படுங்கள்
வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment