Thursday 27 October 2022

உடலும் மனமும் மேம்பட.

 உடலும் மனமும் மேம்பட.

பாதுகாக்கப்பட வேண்டியனவற்றுள் எவற்றைப் பாதுகாக்கத் தவறினாலும் நாக்கை அடக்கிக் காக்க வேண்டும்.
கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும்
நாக்கை அடக்க வேண்டும்.
நாவை அடக்கிக் காக்காது, சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும்.
இப்படி நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தாக்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும் கூட உருவாக்கும் .
விளையாட்டாகப் பேசியது வினையாக முடிவதும் உண்டு. அடங்காக் கோபம் பல கேடுகளை உண்டாக்கி சிறைக் காவலில் இருக்க வைக்கும்.
நாக்கை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் நமது உடலுக்கும், மனதுக்கும் நல்லது..
தேவையற்ற பேச்சை எப்போதும், யாரிடமும் பேசாதீர்கள்.
நன்றாக சிந்தனை செய்து பேசினால் நன்மையே விளையும்.
பொதுமறையாம் வள்ளுவம் சொல்கின்றது.
” யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு ”..என்று.
யாரிடமும், அவர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. அவ்வாறு பேசினால், அதற்கான துன்பம் வந்து சேரும்.
ஆம் பேசுவதாக இருந்தால் அளவோடு பேசுங்கள்
இனிமையாகவும், மற்றவர் மனம் புண்படாமலும் பேசப் பழகுங்கள்.
உங்களின் பேச்சு மற்றவருக்கு அமைதி தருவதாக அமையட்டும்.

No comments:

Post a Comment