Friday 14 October 2022

பேசுவதில் அறநெறி.

 பேசுவதில் அறநெறி.

வெளியே சென்றுவிட்டு ஒருவர் தன் வீட்டுக்குள் நுழைகிறார்.
அவரது மனைவி, வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரைத் தவறி 'மறந்துபோய் வழியில் வைத்திருந்தாள்,
வெளியே சென்றுவிட்டு வந்தவர், வழியில் இருந்த கண்ணாடி டம்ளரைக் கவனிக்கவில்லை. ஆதலால் அவரது கால் இடறிக் கண்ணாடி டம்ளர் உடைந்துவிட்டது.
உடனே அவர் கோபத்தோடு சீறி, “எந்த மூதேவி இங்கே இந்தக் கண்ணாடி டம்ளரை வைத்தது?” என்று எரிந்து விழுகிறார்.
உள்ளேயிருந்த அவரது மனைவி, "வைத்தவர்களுக்குத் தான் கண் தெரியவில்லை. வருகிறவர்களுக்குமா கண் தெரியாமல் போயிற்று?" என்று குரல் கொடுக்கிறார். கணவர் கேட்டதற்கு மனைவி தந்த பதில் இது.
அதற்கு மாறாக கணவர், “கண்ணாடி டம்ளர் வழியில் இருப்பதைப் பார்க்காமல் நான் உடைத்துவிட்டேனே" என்று சொல்லியிருந்தால் அந்த அம்மையாரும்,
"இது உங்களுடைய தவறு இல்லை. நான்தான் வழியில் கவனமில்லாமல் வைத்துவிட்டேன்.
தவறு என்மீதுதான்" என்று சொல்லியிருப்பார்.
இது ஒருவர் எப்படிப் பேசவேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
மனிதர் எவராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், குறைந்த பட்சம் பின்பற்றவேண்டிய
அறநெறி ஒன்று உண்டு.
அதுதான் இன்சொல் பேசுதல்.

No comments:

Post a Comment