Tuesday 18 August 2020

பிறர் தவறுகளை மன்னிப்போம்

 பிறர் தவறுகளை மன்னிப்போம்

எவராவது செய்து விட்ட தமது தவறுகளை நினைத்து வருந்தி நம்மிடம் மன்னிப்பு கேட்டால், நிச்சயம் நாமும் அவற்றை மறந்து, மனமுவந்து நமது மன்னிப்பை வழங்க வேண்டும்...
ஒருவர் தவறிழைக்கும் பொழுது அல்லது தீங்கினை இழைக்கும் பொழுது அவர்கள் மீது எந்தவித வன்மமும் மனதில் வைத்துக் கொள்ளாமல் முழுமையாக மன்னித்து விட வேண்டும்..
மனம் முழுவதும் அவரவர்களின் குற்றங்களைப் பட்டியலிட்டு வைத்திருப்பதில் நமக்கு என்ன பலன்...?
நீங்கள் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பின் பலன் புரிய வரும் உங்களுக்கு.
அதுபோல, நீங்கள் செய்து விட்ட தவறுக்காக நீங்கள் எவரிடமாவது மன்னிப்பை பெற்றுப் பாருங்கள். அப்போது தான் உங்களுக்கு மன்னிப்பின் அருமை புரியும்...
ஆனால் மன்னிப்பதற்கு முதலில் மனம் வர வேண்டும். உதட்டளவில் ‘உன்னை நான் மன்னித்து விட்டேன்’ என்று சொல்லி விட்டு, மனம் முழுவதும் பகைகளை அடுக்கி வைத்திருப்பதில் எவ்வித பொருளும் இல்லை...
பழிவாங்கும் எண்ணம், கோபம், வெறுப்பு ஆகிய தன்மைகளுடன் வாழ்ந்தால், அவை நம்மை ஆள்கின்றது, ஆட்டுவிக்கின்றது...
இந்நிலை நம்மிடம் இருந்து நீங்க புதுமையான வழி, நமது பகைவர்களை மன்னித்து, அவர்களின் குற்றம், குறைகளை முற்றிலுமாக மறந்து விடுவது தான்...
நமது கோபத்தை அடக்கினால் மட்டும் போதாது. கூடவே நமது மன்னிப்பையும் அதனுடன் சேர்த்தே வெளிப்படுத்த வேண்டும்...
ஆம் நண்பர்களே...!
மன்னிக்கும் தன்மை நம்மிடம் தன்னம்பிக்கையை, அதிகரிக்கச் செய்து நம் ஆளுமையை வளப்படுத்துகிறது...!
பகைமையை மறந்து, நட்புறவை வளர்ப்பதன் மூலம் அன்பு நிலை நாட்டப்படுகிறது. உறவுகள் மலர்கிறது...!!
இயன்றவரை அனைவரையும் மன்னிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் பொழுது மரியாதையும் மகிழ்ச்சியும் நம்மிடமே இருக்கும்...!
நமது தவறுகளைத் தவிர்ப்போம், பிறர் தவறுகளை மன்னிப்போம்.

No comments:

Post a Comment