Saturday 29 August 2020

தேவை மனக் கட்டுப்பாடு மட்டுமே....

 தேவை மனக் கட்டுப்பாடு மட்டுமே....

தமிழர்களைத் திரும்பி பார்க்க வைத்த சரித்திர நாயகன் !!
🌍 சுந்தர் பிச்சை ஒரு நாள் மாணவர்களுக்குப் புரியும் வகையில் தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக் கூறினார். அவர் ஒரு கரப்பான் பூச்சியை மையமாகக் கொண்டு அந்த நிகழ்வை கூறத்தொடங்கினார்.
🌍 ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தேன். எனக்கு சற்று தள்ளி இருந்த மேஜையில் ஒரு நண்பர்கள் குழு அமர்ந்து அவர்களுக்குள் பேசியபடி உணவருந்திக் கொண்டிருந்தனர். அந்த சமயம் ஒரு சிறிய கரப்பான் பூச்சி பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்து கொண்டது. அந்த பெண் பயத்துடன் கத்திக் கொண்டே, பதற்றத்துடன் தன் மீது அமர்ந்திருந்த கரப்பான் பூச்சியை தட்டிவிட்டார். ஆனால், அந்த கரப்பான் பூச்சி கீழே விழாமல் அவர் பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது அமர்ந்து கொண்டது. அந்த பெண்ணும் அவரை விட வேகமாகக் கத்திக்கொண்டே அந்தப் பூச்சியை தட்டிவிட்டார். மேலும், அந்தப் பூச்சி பறந்து சென்று அங்கு பணிபுரியும் ஒருவர் மேல் அமர்ந்து கொண்டது. ஆனால் அவரோ அப்பெண்களைப் போல் பதற்றமடையாமல் நிதானமாகச் சரியான சமயம் பார்த்து அக்கரப்பான் பூச்சியைப் பிடித்துத் தூக்கி வெளியே எறிந்தார்.
🌍 இதனைப் பார்த்த நான் சிந்திக்கத் தொடங்கினேன். அந்தப் பெண்களின் செயல்களையும், அப்பணியாள் செய்த செயலையும் ஒப்பிட்டு பார்த்தேன். கரப்பான் பூச்சிதான் அந்த பெண்களின் செயல்களுக்குக் காரணமா? என்று.
ஆனால், அந்தப் பெண்களின் பயந்த சுபாவம் தான், அவர்களைப் பதற்றப்பட செய்துள்ளது. அதே நேரம் அந்தப் பணியாளின் தீர்க்கமான பதற்றமில்லாத சிந்தனையால் தான் அவரால் சரியாக அந்த பூச்சியைப் பிடிக்க முடிந்தது.
அப்போது தான் எனக்கு புரியத் தொடங்கியது. நம்மைச் சுற்றி வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை நம்மைப் பாதிக்காது. நம்மால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும்.
🌍 அதற்குத் தேவை மனக்கட்டுப்பாடு தான். எந்தவொரு செயலுக்கும் உடனடியாக முடிவு எடுப்பதை விட அதைப்பற்றி நன்றாகச் சிந்தித்து முடிவு எடுப்பதுதான் நன்மையைத் தரும் என்றார். இதுபோன்ற பல சிந்தனைக் கருத்துக்களையும், அவர்கள் சாதிக்கும் வகையில் அவர்கள் ஊக்குவிக்கும் செயல்களையும் மாணவர்களிடையே எடுத்துரைத்து வருகிறார் சுந்தர் பிச்சை. இந்த அளவிற்கு உயர அவரது விடாமுயற்சியும் அவர் கடந்து வந்த சில கடினமான பாதைகளும் மிக முக்கியமான ஒன்று.
🌍 அமெரிக்கத் தொழில்நுட்பத் துறையில் இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயமே!! தமிழரின் பெருமையை உலகுக்கு வெளிக்காட்டிய இவர் விடாமுயற்சியால் வெற்றி பெற்ற தமிழன் என்ற சிறப்புக்குரியவர்.
🌍 சுந்தர் பிச்சை தந்தையின் ஒரு வருட சம்பளத்தின் தொகைக்கும் அதிகமாகவே அக்காலத்தில் விமானப் பயண சீட்டின் விலையாக இருந்தது. ஆனால், இன்று சுந்தர் பிச்சை நினைத்தால் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் வாங்கும் அளவிற்கு பன்மடங்கு தன் பொருளாதார நிலையை உயர்வடையச் செய்துள்ளார்.
நன்றி எழிலரசி

No comments:

Post a Comment