Monday 31 August 2020

_*தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு... இ.பாஸ் நடைமுறை ரத்து... வழிபாட்டுத்தலங்கள் திறப்பு*_

 _*தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு... இ.பாஸ் நடைமுறை ரத்து... வழிபாட்டுத்தலங்கள் திறப்பு*_

_*ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு*_
_மத்திய அரசு நேற்று வெளியிட்ட ஊரடங்குத் தளர்வுகளை தொடர்ந்து தமிழக அரசு இன்று அறிவிப்பு_
_செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு_
_*இ.பாஸ் நடைமுறை ரத்து*_
_இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு_
_*வழிபாட்டுத்தலங்கள் திறப்பு*_
_அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி_
_*மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி*_
_சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவு_
_*கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு*_
_அனைத்துக் கடைகளையும் திறப்பு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு_
_காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி_
_*பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி*_
_தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி_
_சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க அனுமதி_
_மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி_
_*கடைகளுக்கு புதிய வழிகாட்டுதல்*_
_வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி_
_*டீக்கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதி*_
_தமிழ்நாடு முழுவதும் தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி_
_உணவகங்களுக்கு கூடுதல் நேரம் - அனுமதி_
_தமிழ்நாட்டில் உணவகங்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி_
_பார்சல் சேவை ஏற்கனவே உள்ளது போன்று, இரவு 9 மணி வரைத் தொடரும்_
_*தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளுக்கு அனுமதி*_
_தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை இயங்க அனுமதி_
_*அரசு அலுவலகங்கள் முழு அளவில் இயங்கும்*_
_வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும்_
_பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்_
_மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்_
_*தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்குத் தடை*_
_தமிழ்நாட்டில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும்_
_கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு_
_*சினிமா ஷூட்டிங்குக்கு அனுமதி*_
_சினிமா ஷூட்டிங்குகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு_
_சினிமா ஷூட்டிங்குகளில் 75 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உத்தரவு_
_*ஞாயிறு தளர்வற்ற ஊரடங்கு ரத்து*_
_ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் தளர்வற்ற முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் ரத்து_
_*பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு தடை*_
_தமிழ்நாட்டில், பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை தடை தொடரும்_
_மாநிலங்களுக்கு இடையே, அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும், ரயில்களை இயக்க அனுமதி_
_*விமான சேவை - புதிய அறிவிப்பு*_
_வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை விரைவில் அறிவிப்பு_
_சென்னை விமான நிலையத்தில், வெளிமாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதி_
_சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில், தற்போதுள்ள நடைமுறையே தொடரும்_

No comments:

Post a Comment