Thursday 13 August 2020

ஆயிரம் ஆண்டுகள் முன்பே ஆன்மிகம் மற்றும் கலையில் உயர்ந்து நின்ற சமூகம்.

 சொந்த வரலாறை இழந்த தேசம் புதிய வரலாறை படைக்க முடியாது!

சூரியனே அஸ்த்தமிக்காத நாடு என்று பெயர் பெற்ற இங்கிலாந்து தேசத்தை கூட ஏசு பிறப்பதற்கு முன் அன்று ஜுலியஸ் சீசர் தலைமையிலான ரோம தேசம் அடிமைப்படுத்தியது.ஜுலியஸ் அடிமைப்படுத்தி ஆண்டதைப் பற்றி இன்று இங்கிலாந்தில் உள்ள மாணவ,மாணவிகள் சிலபஸில் படித்துக்கொண்டிருக்கிறார்களா, என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் வரும்.
இன்று அமெரிக்காவையே மிரட்டிக் கொண்டிருக்கும் சீனதேசத்தை அன்று மங்கோலியா என்கிற சிறிய தேசத்தின் அரசன் செங்கிஸ்கான் அடிமைப்படுத்தினான்.இதே கேள்வியை ஒரு சீனரிடம் கேட்டால்,யார் அந்த செங்கிஸ்கான்? என்று நம்மையே திருப்பிக் கேட்பான்.அதாவது சீன தேசம் அன்று அடிமைப்படுத்தப் பட்ட வரலாறு சீன புத்தகங்களில் இல்லை.
அதே சமயம்,இந்தியாவின் முதல் முஸ்லீம் அரசரான 'குத்துப்புத்தின் ஐபக்'என்பன் டெல்லியை கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக...அவன் அன்று எழுப்பிய வெற்றி (குதுப் மினார்)ஸ்தூபிகள் இன்றும் டெல்லியில் கம்பீரமாக நின்று நம்மைப் பார்த்த சிரிக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,நம் ராஜேந்திர சோழன் மலேசியா முதல் ஜப்பான் வரை பல நாடுகளை வென்று,அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் அன்று கட்டிய வெற்றி ஸ்தூபிகள்...பின்னர் அங்கே வந்த ஆட்சியாளர்களால் தரை மட்டம் ஆக்கப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானம் உலகத்தினரை இன்றும் வியக்கச் செய்கின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணைதான் உலகிலேயே பழமையான நிர்பாசானத்திட்டம்.தற்போதும்,உலகில் புழக்கதில் உள்ள பழமையான அணையும் கல்லணையே.
வானுயர் கட்டிடங்கள் கொண்ட நகரங்கள் உருவாக்கியும்,நல்லதோர் வாழ்க்கைக்கு நெறிகாட்டும் இலக்கியங்கள் படைத்தும், மருத்துவம்,வான சாஸ்த்திரம்,வேதம், போர்கலை போன்றவற்றில் கரைகண்டிருந்த அறிஞர்கள் பலர் வாழ்ந்த நாடு நம் நாடு.
ஒரு காலத்தில்,உலகில் மிகப் பெரிய பணக்கார தேசமாக நம் தேசம் இருந்துள்ளது.பொன்னும்,வைரமும்,அரியவகை கற்களும் கொட்டிக்கிடந்திருக்கின்றன. உலகெங்கும் கொண்டிருந்த வணிக தொடர்பு மூலமாக மூட்டை மூட்டையாக தங்கம் கப்பல்களில் வந்திறங்கியிருக்கிறது. சோழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,அப்போதய முன்னேறிய நாடுகளான ரோம்,எகிப்துடன் கப்பல்களில் வாணிபம் செய்திருக்கின்றனர்.
இப்படி செல்வம் கொட்டிக்கிடந்ததனாலேயே எதிரிகள் நம் தேசத்தின் மீது தொடர்ந்து படையெடுக்க காரணமாக அமைந்துள்ளது.பல தேசத்தை சேர்ந்த மன்னர்கள்,நம் தேசத்து மீது பலமுறை கொள்ளையடிப்பதற்கே படை எடுத்திருக்கின்றனர்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் நாகரீகத்தோடு வாழ்ந்தவரலாறை படிப்பதில்லை.நம் அரசுகள் நம் தேசத்தில் நம் முன்னோர் வாழ்ந்த உண்மை வரலாறை பாடபுத்தகங்களில் இந்தியா முழுவதும் வெளிப்படுத்தவில்லை.
முகாலயர்கள்,பிரான்ஸ் காரர்கள், போர்ச்சுகீசியர்கள்,டச்சுகாரர்கள் இறுதியாக வெள்ளையர்கள் வரை... நாம் அடிமைப்படுத்தப்பட்ட ஆயிரம் ஆண்டு வரலாறுகளைத்தான் நாம் திரும்ப திரும்ப படிக்கிறோம்.
சொந்த வரலாறை இழந்த தேசம் புதியவரலாறை படைக்க முடியாது.
நாம் சுயத்தை இழந்துவிட்டோம்.பல ஆயிரம் ஆண்டுகள் பல தேசத்தை ஆண்ட வரலாறை நாம் இழந்துவிட்டோம்.
நாம் இழந்த நமது வரலாற்று பெருமையை மீட்டெடுக்க வேண்டியது தேச பக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.(மீள்)

No comments:

Post a Comment